உன் சுயபுத்தியின் மேல் சாயாதே 65-01-20 இப்பொழுது நாம் ஜெபத்துக்காக சிறிது நேரம் நின்ற வண்ணமாக இருப்போம். இந்த கன்வென்ஷனில் தேவன் உங்களுக்கு விசேஷித்த ஒன்றை செய்ய வேண்டுமென்று விருப்பங்கொண்டு, உங்கள் இருதயத்தில் விண்ணப் பங்கள் வைத்து உள்ளவர் எத்தனை பேர் இங்குள்ளனர்? இப்பொழுது நாம் அவருக்குத் தலை வணங்குவோம். 2. பரலோகப்பிதாவே, எங்கள் மனச்சாட்சியின்படி உம்மை இது வரைக்கும் தொழுது கொள்ளும்படியாக ஒரு சுயாதீனமுள்ள நாட்டில் இங்கு நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஒன்று கூடியுள்ளதால், நாங்கள் சிலாக்கியம் பெற்ற ஜனங்களே. பிதாவே, இந்த நிலை நீண்ட காலம் நீடித்திருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். நாங்கள் பெற்றுள்ள இந்த மகத்தான சிலாக்கியத்தை பயன்படுத்திக் கொண்டு, இன்றிரவு ஆராதனையில் எங்கள் முழு இருதயத்தையும் செலுத்தி உம்மை ஆராதித்து, "இன்றிரவு தேவன் எங்கள் மத்தியில் வந்து தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்தார்" என்று சொல்லப்படுவதாக. கர்த்தாவே, இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு இழந்து போன ஆத்துமாவையும் இரட்சிப்பீராக. பின் வாங்கிப் போன ஒவ்வொரு வரும் தேவனுடைய வீட்டுக்கு திரும்ப வருவார்களாக. வியாதியஸ்தர் ஒவ்வொருவரும் சுகமடையவும், ஊனமுள்ளவர் நடக்கவும், குருடர் பார்வையடையவும், செவிடர் கேட்கவும், ஜனங்களின் மத்தியில் இயேசு கிறிஸ்துவுக்கு துதியும் மகிமையும் செலுத்தப்படவும் நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் இங்கு ஒன்று கூடி இயேசுவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதங்களைக் கோருவதனால் இது நீண்ட காலம் நினைவு கூறப்படுவதாக. ஆமென். நீங்கள் உட்காரலாம். 3. ரமாதா இன்னுக்கு நான் வரும் போதெல்லாம், ஒரு வகையில் வீட்டுக்கு வருவது போன்ற உணர்வு எனக்கு உண்டாகிறது. நான் அடிக்கடி இங்கு வருவதால், இவர்களுக்கு என்னை நன்றாக தெரிந்திருக்கும். அதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஏனெனில் ரமாதா இன்னின் பணியாளர்கள் மிகவும் நல்லவர்கள். டூசானிலும் இங்கும் இருக்கும் பணியாளர்கள் எங்களிடம் பட்சமாக நடந்து கொண்டு, நாங்கள் ஆராதனை நடத்த அனுமதிக்கின்றனர். ரமாதா இன்னில் என் சொந்த ஆராதனை ஒன்றை நடத்தினேன். அதன் மேலாளர் என்னிடமிருந்து கட்டிடத்துக்கு வாடகை வாங்க மறுத்து விட்டார். அது பாராட்டத்தக்க செயல். தேவனுடைய வீட்டாருக்கு நல்லவர்களாய் இருந்தவர்களை, இப்பொழுது நான் தேசத்தைக் கடந்து செல்லும் போது, நினைவு கூருவேன். 4. ஞாயிறு இரவுக்கு, இல்லை, ஞாயிறு பிற்பகலுக்கு பிறகு எங்களுக்கு சில மகத்தான தருணங்கள் உண்டாயிருந்தன - என்னைப் பொறுத்த வரையில் இருந்தது. அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவித்தவனாய், பரிசுத்த ஆவியானவரோடும் அவருடைய ஜனங்களோடும் ஐக்கியங் கொண்ட அருமையான தருணம் எனக்கு உண்டாயிருந்தது. 5. நாம் ஒருமித்து தேவனை ஆராதிக்கும் இவ்வேளையில் இதை நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாகும் போது, அவருடைய தன்மையாக, அவரில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். தேவன் உங்களுக்குள் இருந்து கொண்டு, நீங்கள் அவரை அனுமதிப்பீர்கள் ஆனால், அவருடைய சித்தத்தை உங்கள் மூலம் நிறைவேற்றுகிறார். 6. எனவே இன்றிரவு இங்கு கூடி வந்துள்ள ஒவ்வொரு நபரும், பகலில் நடந்தவைகளை மறந்து விட்டு, அவையனைத்தும் - ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, ஆராதனையில் தங்கள் இருதயங்களை செலுத்துவார்களென நம்புகிறேன் - இன்றிரவு மாத்திரமல்ல, வரப்போகும் கன்வென்ஷன் நாட்களிலும். அநேக பிரதிநிதிகள் கன்வென்ஷனில் கலந்து கொள்வதற்கென ஏற்கனவே வந்துவிட்டனர் என்பதில் சந்தேகமே கிடையாது. நாளை துவங்கும் கன்வென்ஷனுக்கு வந்திருப்பவர் சிலரை இன்றிரவு மேடையின் மேல் கண்டேன். நாம் இப்பொழுது நடத்தின எழுப்புதல் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களிடம், கூடுமானால் கன்வென்ஷனுக்கு தங்கிப் போகும்படி கேட்டுக் கொண்டேன். கன்வென்ஷனில் பேச சில சிறந்த பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். அவர்களில் ஒருவர் வரமுடியவில்லை. ஆனால் அவருடைய இடத்தை எடுத்துக் கொள்ள அநேகர் இங்குள்ளனர். நானும் கூட கன்வென்ஷன் முடியும் வரைக்கும் தங்கியிருந்து, இந்த ஐக்கியத்தை அனுபவிக்க விரும்புகிறேன். 7. உங்களுக்கு தெரியுமா, போதகர்கள் என்ற முறையில் நாங்கள் இங்கு எழுந்து நின்று பேசி, எங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் ஜனங்களுக்கு அளித்து வருகிறோம். ஒரு முறை நான், "லீலிப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள் (தமிழ் வேதாகமத்தில் 'காட்டுப் புஷ்பங்கள்' என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்), அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தி இருந்ததில்லை (மத்.6:28-29) என்று இயேசு உரைத்ததை பொருளாகக் கொண்டு பிரசங்கம் நிகழ்த்தினேன். நான் காண்பது என்னவெனில், லீலிப் புஷ்பம் தன்னை பிரகாசமாக்கிக் கொள்ள, இரவும் பகலும் உழைத்து நூற்று வளர வேண்டியதாயுள்ளது. இருப்பினும் அதன் விளைவாக அது எந்த ஆசீர்வாதங்களையும் தனக்கென பெற்றுக் கொள்வதில்லை. அது தன்னைத் திறந்து கொடுக்கிறது. அவ்வழியே கடந்து செல்பவன் அதன் நறுமணத்தை முகர்கிறான். அதற்குள்ளே இருக்கும் தேனை தேனீ எடுத்துக்கொள்கிறது. அது உழைத்து பெறும் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு: அளித்து விடுகிறது. அந்த செய்திக்கு நான் "சங்கை திரு. லீலிப்புஷ்பம்' என்னும் தலைப்பை அளித்தேன். அது வினோதமான ஒரு தலைப்பு. 8. ஆனால் அது அப்படித்தான் செய்கிறது. அவ்வாறே போதகர்கள் தங்களுக்கு உள்ளதை ஜனங்களுக்கு அளிக்கின்றனர். அவர்கள் பேசுவதை உட்கார்ந்து கொண்டு கவனமாக கேட்பது நன்றாயுள்ளது. அது தீயினால் அனல் மூட்டிக் கொள்வது போல். நாம் ஒருவர் மற்றவரின் தீயினருகில் உட்கார்ந்து கொண்டு, நமது சகோதரர்கள் ஜனங்களுக்கு பிரசங்கிக்கும் சுவிசேஷத்தினால் நம்முடைய இருதயங்களை அனல் முட்டிக் கொள்ள பிரியப்படுகிறோம். அப்படி செய்ய எனக்குத் தருணம் கிடைத்ததற்காக நான் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். இப்பொழுது நான் அவர் மேல் சார்ந்து... 9. எல்லா ஜெப அட்டைகளையும் இன்றிரவு விநியோகித்து விட்டதாக பில்லி என்னிடம் கூறினான். இங்கு ஜெப வரிசையை அமைக்க செளகரியமில்லை. பாருங்கள், நீங்கள் வெளியே சென்று இதன் வழியாக வந்து, பிறகு ஒரு இருட்டறையைக் கடந்து, இவ்வழியாக வரவேண்டும். நீங்கள் இங்கு அடைவதற்கு முன், தடுக்கி விழ நேரிடும். மேலும் ஊனமுற்றவர்களுக்கு அது மிக கடினமாயிருக்கும். 10. ஆனால் கர்த்தர் என்ன செய்யப் போகிறாரென்று நமக்குத் தெரியாது. இன்றிரவு அவர் நமது மத்தியில் இறங்கி வந்து. இங்குள்ள. எல்லோரையும், எல்லா வியாதிகளையுமே சுகமாக்கி விட முடியும். ஓ, இதுவரை என் வாழ்க்கையில் நான் கண்டுள்ள எல்லா ஜெப வரிசைகளைக் காட்டிலும் அதையே நான் காண விரும்புகிறேன் தேவன் தமது இராஜாதிபத்திய முறையில் தமக்குக் கீழ்படியும் பிள்ளைகளின் மத்தியில் இறங்கி வருவதை. அது எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். 11. வழக்கமாக, கைகளை வைக்குதல் போன்ற விதத்தில் நீங்கள் ஜனங்களுடன் தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்ளும் போது, ஒருக்கால் அவர்கள், "இன்னின்ன போதகர் என் மேல் கைகளை வைத்தார், தேவனுக்கு மகிமை" என்று சொல்ல வகையுண்டு. அப்பொழுது ஜனங்கள் போதகரையே நோக்குகின்றனர். அநேகர் அப்படி செய்வதில்லை என்று எண்ணுகிறேன். 12. ஆனால் இங்கு நின்று கொண்டு வார்த்தையைப் பிரசங்கிக்கும் போது, பரிசுத்த ஆவி விழுந்து எல்லோரையும் சுகப்படுத்தினால், அது முற்றிலும் தேவனுடைய கிருபையாகும். அப்பொழுது தேவன் எல்லா துதியும், மகிமையும் பெற்றுக் கொள்கிறார். மற்ற எவருக்கும் ஒன்றும் கிடைக்கப் பெறுவதில்லை. அப்படித்தான் என் ஊழியத்தில், நான் அநேகருக்கு ஜெபிக்காத காரணம் என்னவெனில், நேற்றிரவு நம்மால் முடிந்த அளவுக்கு ஜனங்களுக்கு ஜெபம் செய்ய முயன்றோம். ஆனால் கைகளை வைக்குதல் என்பது..... 13. இன்றிரவு ஒருக்கால் பரிசுத்தாவி நமது மத்தியில் வந்து. தம்மை வெளிப்படுத்தக் கூடும். அதன் மூலம் அது தத்ரூபமாகி விடுகிறது. அவர் ஒருக்கால் அவருடைய இராஜாதிபத்தியத்தில் அவ்வாறு செய்யக் கூடும்., பாருங்கள். அப்பொழுது என்னால், “இந்த மனிதன், இந்த ஸ்திரீ, அந்த குழந்தை" என்று குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது, பாருங்கள். பரிசுத்த ஆவி கட்டிடத்தில் அசைவாடி அவருக்கு விருப்பமானவர்களிடம் பேசுவார். பாருங்கள், அது அவருடைய இராஜாதிபத்தியம். அது தேவனுடைய வாக்குத் தத்தமாய் இருப்பதால், அது அவருடைய சமுகத்தை நமது மத்தியில் கொண்டு வந்து, இராஜாதிபத்தியத்தைக் குறித்த அறிவை அளிக்கிறது. அதை நாம் கண்டு களி கூருகிறோம்! அது என்னவாயிருந்தாலும்... 14. நீங்கள், "என் கை ஊனமாயிருந்தது. நேற்றிரவு நான் அங்கிருந்தேன். அது எனக்கு குணமாகவில்லையே" எனலாம். அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. உன்னைப் பொறுத்த வரையில், அது ஏற்கனவே முடிந்து விட்டது. நீ உன் கையைப் பார்ப்பதில்லை, ஒரு வாக்குத்தத்தத்தைப் பார்க்கிறாய், பார். எனவே நீ, “சகோ. இன்னார் இன்னார் எனக்கு விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கவில்லை" என்று சொல்ல முடியாது. கர்த்தருடைய சமூகம் உனக்கு விசுவாசத்தை அளித்தது. பார். அதன் பிறகு அவர் தம்முடைய வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்கினார். (சங். 107: 20). 15. நேற்றிரவு நான் மறுபடியும் என் வாக்கை காத்துக் கொள்ளவில்லை, இன்றிரவு என்னால் முடிந்தால் எப்படியாவது காத்துக் கொள்ள முயல்வேன். யாரோ ஒருவர் என்னிடம், "நேற்றிரவு உங்கள் பொருளில் நிலைத்து இருக்கவில்லை" என்றார். ஆம், நான் நிலைத்திருக்கவில்லை. ஏனென்று கூறுகிறேன். நான் ஒரு பொருளின் மேல் பேச எத்தனித்திருந்தேன், அது என்னவென்று இப்பொழுது மறந்து விட்டது. "இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்" என்னும் பொருளின் மேல். 16. பவுல், "முற்காலத்திலே நாம்", ஒரு காலத்தில், அதாவது இக்காலம் அல்லாத வேறொரு காலத்தில் "நாம் அக்கிரமங்களினாலும் பாவங்களி-னாலும் மரித்தவர்களாயிருந்தோம். அப்படிப்பட்டவர்களாயிருந்த நம்மைத் தேவன் உயிர்ப்பித்தார்" (எபி. 2:1) என்று கூறினதை நான் விளக்க முயன்றேன். பாருங்கள், ஏதாவதொன்று உயிர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, உயிர்ப்பிக்க அங்கு ஒன்று இருந்தாக வேண்டும். அது உண்மை. 17. எனவே, பாருங்கள், நீங்கள் தேவனுடைய முன்னறிவில் இருந்தது உண்டானால், தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய குமாரன் அல்லது குமாரத்தியாயிருக்க ஒரே வழி, தேவனுடைய ஒரு பாகமாக இருப்பதன் மூலமே. நீங்கள் இல்லாமல் தேவன் முழுமை அடைவதில்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். அது உண்மை. ஏனெனில் ஒரே ஒருவர், நித்திய ஜீவனுக்கு ஒரே ஒரு ஆதாரம் மாத்திரம் உண்டு, அது தேவன். அவர் ஒருவர் மாத்திரமே நித்திய ஜீவனை உடையவராயிருக்கிறார். பாருங்கள்? நீங்கள் அவருடைய ஒரு பாகமாக தொடக்கத்தில் அவருடைய சிந்தையில் இருந்ததால், அவருடைய தன்மையாக இருக்கிறீர்கள். அவர் தொடக்கத்தில் உங்களைக் குறித்து சிந்தித்ததால், அது உங்களை அவர் பக்கம் இழுக்கிறது. அது தான் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். அவர்களில் சிலர் ஒரு போதும் உயிர்ப்பிக்கப்பட முடியாது. அவர்களிடம் அது இல்லை, அவ்வளவு தான். 18. ஒரு கோதுமை மணியை நீங்கள் நிலத்தில் விதைப்பது போல்... அது எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்குள் ஜீவ அணு இல்லாமற்போனால், அது உயிர்ப்பிக்கப்படவே முடியாது. முதலில் அதற்குள் ஜீவ அணு இருந்தாக வேண்டும். 19. கழுகுக்குஞ்சு கோழியுடனும் கோழிக்குஞ்சுகளுடனும் நடந்த சிறு கதையை நான் கூறத்தொடங்கினேன். கழுகுக்குஞ்சு அங்கு பொறிக்கப்பட்டு வெளி வந்ததால், அப்படி செய்ய வேண்டியதாய் இருந்தது. ஆனால் கோழிக் குஞ்சுகளுக்கு இருந்த நல்லுணர்வு அதற்கு இருக்கவில்லை. ஒரு நாள் அதன் தாய் வந்து சத்தமிட்ட போது, அந்த சத்தம் அதற்கு நன்றாயிருப்பதாக தோன்றினது. ஏனெனில் அது தொடக்கத்திலேயே கழுகாயிருந்தது. அதன் ஸ்தானம் எதுவென்று அது கண்டு பிடிக்க வேண்டிய நேரம் வர வேண்டியதாயிருந்தது. 20. அப்படித்தான் ஒவ்வொரு விசுவாசியும் இருக்கிறான். நீ இந்த உலகத்திற்காக பிறக்கவில்லை. நீ தேவனுடைய குமாரனாய் இருப்பதற்கென தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். நீ கோழிக் குஞ்சுகளின் முற்றத்தில் இருக்க வேண்டியவன் அல்ல. நீ ஒரு கழுகு. 21. அந்த கழுகு கதையை நான் கூறிக் கொண்டே உயர சென்று, மறுபடியும் தரையை அடைய முடியவில்லை. எனவே நான்... நான் நீண்ட நேரம் கூறி விட்டேன். அதற்குள் என் பொருள் என்னவென்று மறந்து விட்டது, என் குறிப்புகளையும் தொலைத்து விட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. அது தான், அந்த கழுகு கதை தான் காரணம். 22. இப்பொழுது, அந்த கழுகு, தேவன் தாமே-! உங்களுக்குத் தெரியுமா, தேவன் தமது தீர்க்கதரிசிகளை கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார். அவர் தம்மை கழுகு என்று அழைத்துக் கொள்கிறார். அவர் யேகோவா கழுகு, தகப்பன் கழுகு. 23. அவர் அப்படிச் செய்யக் காரணம், கழுகு மற்றெந்த பறவையைக் காட்டிலும் உயரமாகப் பறக்க முடியும். ஏனெனில் அது மற்ற பறவைகளை விட வித்தியாசமான உடலமைப்பு கொண்டது. அது மற்ற பறவைகளைப் போல் தன் கூட்டை நிலத்தில் கட்டுவதில்லை, அது உயரத்தில் கட்டுகிறது. 24. மற்றொரு காரியம். அது விசேஷித்த உடலமைப்பு கொண்ட பறவை. ஒரு பருந்து, அல்லது காகம். அல்லது வேறெந்தப் பறவையும் கழுகைப் பின் தொடர்ந்து வானத்தில் உயரப் பறக்க முயன்றால், அது தூள் தூளாகி விடும். அதற்கென்று அது உருவாக்கப்படவில்லை. உயர செல்வதற்கென அது விசேஷித்த பறவையாக இருக்க வேண்டும். அதன் சிறகுகள் மற்ற பறவைகளுக்கு உள்ளதைக் காட்டிலும் இறுக்கமாக உள்ளன, 25. அவ்வாறே அதன் பார்வையும் மற்ற பறவைகளின் பார்வையைக் காட்டிலும் கூர்மையாக உள்ளது. அது உயரச் செல்ல செல்ல, அதனால் அதிக தூரம் காண முடிகிறது. ஆனால் சில பறவைகள் அவைகளால் முடிந்த அளவுக்கு உயரச் செல்லும் போது, வெளவாலைப் போல் குருடாகி விடுகின்றன. அப்படித்தான்... அவர்களுக்கு அவர்கள் கோட்பாடுகளைத் தவிர வேறொன்றுமே தெரியாது. "அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. ஏன்? அவர்களால் அதைக் காண முடிவதில்லை. 26. ஆனால் கழுகுகளால் வானங்களுக்கு, வானாதி வானங்களுக்கு உயரச் செல்ல முடியும். உங்களால் காண முடியவில்லையென்றால் அவ்வளவு உயரம் செல்வதனால் என்ன பயன்? ஒ, நான் அவைகளில் ஒருவனாக, கூடு... நிறையவுள்ள கழுகுகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதனால் மிகவும் மகிழ்வுறுகிறேன். 27. இப்பொழுது நாம் பழைய ஏற்பாட்டுக்கு, சாலொமோன் எழுதிய நீதிமொழிகளின் புத்தகத்துக்கு நமது வேதாகமத்தை திருப்புவோம். கர்த்தராகிய இயேசுவுக்கு. அடுத்தபடியாக சாலொமோன் உலகிலேயே அறிவில் சிறந்தவன். கர்த்தராகிய இயேசு சாலொமோனைப் போல் அல்ல. சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் மூலம் ஒரு ஸ்திரீயின் வயிற்றிலிருந்து பிறந்தவன். ஆனால் இயேசுவோ கன்னிகையின் வயிற்றிலிருந்து பிறந்த குமாரன். அவர் முழுவதும் மனிதன் அல்ல, அவர் தேவன். அவர் தேவன் - மனிதன். அவர் மனிதனை விட மேலானவர். அவர் மனிதனைவிட கூடுதலானவர். பாருங்கள்? ஆனால் சாலொமோனோ உங்களையும் என்னையும் போல ஒரு மனிதன். அவன் ராஜ்யபாரம் பண்ண தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டான். அவனிடம் ஞானத்தின் வரம் இருந்தது. நமது கர்த்தரைத் தவிர்த்து, நாம் அறிந்துள்ளவர் அனைவரிலும் அவன் அறிவில் சிறந்தவன். அவன் நிதிமொழிகளை எழுதினான். அவை மிகவும் நன்றாயுள்ளன என்பது என் கருத்து. 28. இப்பொழுது நாம் வேதாகமத்தை நீதிமொழிகளின் புத்தகம் முதலாம் அதிகாரம், இல்லை 2-ம் அதிகாரத்துக்கு திருப்பி, முதலாம் வசனம் தொடங்கி வாசிப்போம். அது சாலொமோன் தன் மகன்களுக்கு "என் மகனே, என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டால்..... என்பதன் தொடர்ச்சியாகும். என்னை மன்னிக்கவும். 29. அது நீதிமொழிகள் 3:1. நான் வருந்துகிறேன். என் குறிப்பு புத்தகத்தை நான் நோக்கின போது, அது நீதிமொழிகள் 3-ம் அதிகாரம், முதலாம், இரண்டாம் அதிகாரம் அல்ல. நான் வருந்துகிறேன். நீதிமொழிகள் 3: 1. என் மகனே, என் போதகத்தை மறவாதே, உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப் பண்ணும். கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக, நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வை யிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து.. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். 30. ஓ, அது மிகவும் அழகான வேத வாக்கியம் என்று எண்ணுகிறேன். இப்பொழுது நம் வசனத்திலிருந்து, “உன் சுயபுத்தியின் மேல் சாயாதே” என்னும் பொருளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 31. நாம். வாழும் இக்காலத்துக்கு இது விசித்தரமான ஒரு பொருளாகும். ஏனெனில் இன்று கல்விக்கும் நம் சுயபுத்தியினால் நாம் காரியங்களை அறிந்து கொள்ளும் விதத்துக்கும் அதிக முக்கியத்துவம் செலுத்தப்படுகிற தென்பது உறுதி. இது கல்வி கற்கும் காலமாயுள்ளது. ஆனால் இங்கு விசித்திரமான இந்த ஆலோசனையைக் காண்கிறோம். மற்ற வேத வாக்கியங்களைப் போலவே, இதற்கும் இதற்குரிய இடம் உள்ளது. அந்த இடம் எங்குள்ளது என்பதை தேவன் நம்மைக் காணச் செய்வார் என்று நம்புகிறோம். 32. இன்றைக்கு கல்வி கற்க நமது பிள்ளைகளை நாம் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். அவர்கள் முதல் நிலைப்பள்ளி படித்து முடித்தவுடனே, அதிக அறிவு பெறுவதற்கென அவர்களை உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். சில பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாக கல்லூரி படிப்பும் படித்து இன்னும் அதிக அறிவைப் பெறுகின்றனர். அதன் மூலம் அவர்கள் பெறுவது என்னவெனில்... அநேக சமயங்களில், வேலை கிடைப்பதற்கென, நீங்கள் குறைந்தது உயர் நிலைப்பள்ளி அறிவை அல்லது கல்லூரி படிப்பை உடையவர்களாயிருக்க வேண்டும். 33. இருப்பினும், சாலொமோன் ஞானி நமது சுயபுத்தியின் மேல், நாம் படித்தவைகளின் மேல் சாயக் கூடாது என்று நமக்கு அறிவுரை கூறுகிறான். அவன் ஏன் அவ்வாறு கூறுகிறான் என்று நாம் வியக்கிறோம். ஏனெனில் நமது நவீன ஞானம் வழக்கமாக மனித ஞானமாயிருந்து, தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ளது. அதை தான் அவன் தன் மகன்களுக்கு புத்திமதியாக கூற முயன்றானேயன்றி, அவர்கள் படிப்பறியாதவர்களாயிருக்க வேண்டும் என்பதனால் அல்ல என்று எண்ணுகிறேன். அவர்கள் தங்கள் சுய புத்தியின் மேல் சாயக்கூடாது என்று அறிவுரை கூறினான்.” 34. நம்முடைய குமாரருக்கும் தேவனுடைய குமாரருக்கும் நாம், கல்வி கற்பதனால் பரவாயில்லை என்றும், அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை என்றும். ஆனால் கல்வி தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருக்கும் ஆனால், அப்பொழுது வார்த்தையின் மேல் சாய்ந்து கல்வியை விட்டுவிட வேண்டுமென்றும் அறிவுரை கூறுவது நலமென்று. எண்ணுகிறேன். கல்வி ஒருக்கால் உங்களுக்கு: நல்ல ஒரு வேலையை அளித்து, நுண்ணறிவு படைத்த மக்களினிடையே ஒரு ஸ்தானத்தை அளிக்கும். அது நல்லது தான். அது ஒருக்கால் உங்கள் பொருளாதார நிலையிலும், வாழ்க்கையிலும் பேருதவியாயிருந்து, உங்கள் வாழ்வின் தரத்தை சிறிது மேம்படுத்தக்கூடும். 35. ஆனால் என் மகனே, ஒரு காரியத்தை நீ நினைவுகூர வேண்டும். நீ மரிக்க வேண்டும். உனக்கு எவ்வளவுதான் படிப்பு இருந்தாலும், உன்னால் எவ்வளவு தான் பண்பாட்டைச் சேகரித்துக் கொள்ள முடிந்தாலும், நீ மரணத்தை சந்திக்க வேண்டும். ஏனெனில் "மனிதன் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" என்று எழுதப்பட்டுள்ளது. தேவன் அப்பொழுது... மரணம் அவ்வளவு மோசமானதல்ல, ஆனால் நியாயத்தீர்ப்பு அடைவது மோசமான பாகம். நீங்கள் மரித்து விடலாம், ஆனால் பின்பு நியாயத் தீர்ப்பு அடைய வேண்டும். நீ உலகிலிருந்த போது எவ்வளவு படித்தாய், எவ்வளவு அறிவை சேகரித்துக் கொண்டாய், நீ பட்டம் பெற்றுக் கொண்டாயா, போதகராகப் பட்டம் பெற்றுக் கொண்டாயா என்றெல்லாம் தேவன் உன்னிடம் கேட்கப் போவதில்லை. அவையெல்லாம் உனக்கு அவசியமென்று கருதப்படமாட்டாது. 36. ஆனால் தேவனுடைய வார்த்தையை அறிந்து கொள்ள நீ என்ன செய்தாய் என்று உன்னிடம் கேட்கப்படும். அது தான் அவசியம். உன் கல்வி நல்லது தான், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஜீவனாயுள்ளது. "என் வார்த்தை ஜீவனாயுள்ளது' என்றார் அவர். அதை அறிவதே ஜீவன். அவர், “அவரை அறிந்து கொள்ளுங்கள்" என்றார். அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் வார்த்தையாயிருப்பதனால் அவரை வார்த்தையின் மூலமே நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அந்த ஒரு வழியில் மாத்திரமே நீங்கள் அவரை அறிந்து கொள்ள முடியும். 37. சிலர் வந்து உங்களிடம், “இது தான் தேவன்', "அது தான் தேவன்", "இது சரி", "அது சரி" என்று சொல்லக்கூடும். ஆனால் நாமோ வார்த்தைக்கு வர வேண்டும், அதுவே சத்தியம். 38. வார்த்தை வடக்கு நட்சத்திரத்தைப் போன்றது, அது உண்மையான நட்சத்திரம். உலகம் எப்பக்கம் மிதந்து சென்றாலும், வடக்கு நட்சத்திரம் பூமிக்கு மையமாக உள்ளது. உங்கள் திசைக்காட்டும் கருவியை நீங்கள் வடக்கு நட்சத்திரத்துக்கு பொருத்துகிறீர்கள். ஏனெனில் அது எப்பொழுதுமே பூமிக்கு மையமாக உள்ளது. மற்ற நட்சத்திரங்கள் வேறு திசைகளில் சென்ற போதிலும், வடக்கு நட்சத்திரம் நிலையாக உள்ளது. 39. பரிசுத்தாவி தான் திசை காட்டும் கருவி. உங்கள் திசை வடக்கு நட்சத்திரம். பரிசுத்தாவி எப்பொழுதுமே வார்த்தையை சுட்டிக் காட்டும். அது உங்களை தேவனுடைய வார்த்தைக்குத் தவிர வேறெதற்கும் வழி நடத்தாது. அப்படியிருக்க ஒரு மனிதன் வார்த்தைக்கு முரணாயுள்ள கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, தனக்கு பரிசுத்தாவி உள்ளதாக எப்படி கூற முடியும்? பரிசுத்தாவி உங்களை கோட்பாட்டுக்கு அப்பால் சுட்டிக் காண்பிக்கும். உங்களை வார்த்தைக்கு சுட்டிக் காண்பிக்க பரிசுத்த ஆவி அவசியமாயுள்ளது. ஏனெனில் அவர் வார்த்தையாய் இருக்கிறார். அது அங்கு மாத்திரமே... திசை காட்டும் கருவியிலுள்ள காந்த ஊசி வட துருவத்தை மாத்திரம் சுட்டிக் காண்பிக்க பொருத்தப்பட்டுள்ளது, அந்த ஒரு திசைக்கு மாத்திரமே அது இழுக்கப்படும். வார்த்தையின் ஆக்கியோனும், அதை எழுதினவரும், அதை உயிர்ப்பிக்கிறவருமான பரிசுத்தாவி ஒரு நபரை வார்த்தைக்குத் தவிர வேறு எதற்காவது எப்படி சுட்டிக் காண்பிக்க முடியும்? 40. எனவே ஒரு நபர் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக கூறிக்கொண்டு, வார்த்தைக்கு முரணாயுள்ள ஒன்றை ஏற்றுக் கொள்வானானால், அவன் பெற்றுள்ளது உண்மையான பரிசுத்தாவி அல்ல என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? அது ஆவியாயிருக்கக் கூடும். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது கிறிஸ்துவின் பரிசுத்தாவி அல்ல. உங்களுக்குத் தெரியுமா, அநேக சமயங்களில், மனிதர் கொண்ட குழுவில், அவர்கள் ஒருவரின் ஆவியை மற்றவர் பெற்றுக்கொள்கின்றனர். அது ஒரு குறிப்பிட்ட காரியத்தை சுட்டிக் காண்பிக்கலாம், ஆனால் கிறிஸ்துவை அது சுட்டிக் காண்பிப்பதில்லை. ஆனால் பரிசுத்தாவி எப்பொழுதுமே கிறிஸ்துவை சுட்டிக் காண்பிக்கிறார். கிறிஸ்துவே வார்த்தை. 41. இதை நாம் வெளிப்படையாக வேதாகமத்தில் காண்கிறோம், என்னால் அதை காண முடிகிறது. ஒருக்கால் என் சிந்தையில் நான் தவறாயிருக்கக் கூடும். அது தவறென்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் "காரியங்களை அறிந்து கொள்ள உன் சுயபுத்தியின் மேல் சாயாதே. உன் சுய புத்தியின் மேல் நீ சாய்ந்திருந்தால், சரியான பாதையில்லிருந்து நிச்சயம் விலகிச் செல்வாய். ஜீவனைப் பொறுத்த விஷயத்தில், நீ மற்றவரின் புத்தியின் மேலும் சாய்ந்து இருக்கக் கூடாது. ஜீவனைக் கண்டு கொள்ள நீ வார்த்தையின் மேல் சாய்ந்திருக்க வேண்டும். அது தான் ஜீவன். 42. நாம் ஆதி முதற்கொண்டு இதை காண்கிறோம். ஆதியிலே தேவன் பூமியில் வைத்த தமது முதல் குடும்பத்தினரிடம், அவர்கள் பிழைப்பதற்கென வார்த்தையை அளித்த முதற்கொண்டு இது நமக்கு மிகவும் வெளிப்படையாய் உள்ளது. அவருடைய வார்த்தையைக் கொண்டே அவர்கள் பிழைக்க வேண்டும். உணவு உண்பதன் மூலம் அல்ல, அவருடைய வார்த்தையைக் கொண்டே அவர்கள் நித்திய காலமாய் பிழைக்க வேண்டும். அவர்கள் வார்த்தையைக் கைக்கொண்டிருந்தால் நித்திய காலமாய் பிழைத்திருப்பார்கள். ஆனால் அந்த வார்த்தையின் ஒரு சிறு பாகம் தவறான இடத்தில் பொருத்தப் பட்டபோது, சங்கிலி முழுவதும் உடைந்து போய் அது மனிதகுலத்தை மரணத்தில் ஆழ்த்தியது. பாருங்கள், இப்பொழுது நாம் கவனிக்கிறோம். 43. ஏவாள் புத்திசாலி என்பதில் சந்தேகமில்லை. அவள் தேவனுடைய குமாரனாகிய ஆதாமிலிருந்து எடுக்கப்பட்ட முதல் ஸ்திரீ. ஏவாள் பாவமே இல்லாத ஓரிடத்தில் இருந்த காரணத்தால், தேவன் எப்படிப்பட்டவர் என்னும் அருமையான கருத்தை உடையவளாயிருந்திருப்பாள். ஏனெனில் ஒவ்வொரு பிற்பகலின் போதும், அவளும் அவளுடைய கணவனும் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் சாயங்காலத்தில் உலாவி, தேவனுடன் முகமுகமாய் பேசினர். ஒவ்வொரு நாளும் அவள் தேவனுடன் உலாவி, அவருடன் முகமுகமாய் பேசி, பின்பு விவேகத்துக்கு செவி கொடுத்து, தேவனுடைய வார்த்தையை விட்டு விலகிப் போனது எவ்வளவு விவேகமற்ற செயல் ! 44. அப்படிப்பட்டவர்களை நாம் இப்பொழுதும் பெற்றுள்ளோம். அவர்கள் தேவனுடைய சமுகத்தில் உட்கார்ந்த பிறகு, விவேகத்துக்கு செவி கொடுத்து, தேவனுடைய வார்த்தையை விட்டு எளிதில் அகன்று விடுகின்றனர். தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்டு, அது வெளியரங்கம் ஆக்கப்பட்டு, குடிகாரர்களும் பாவிகளும் பீடத்தண்டையில் வந்து மனம் மாறி கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகின்றனர். பெயர் கெட்டவர்கள்'; நற்பண்புள்ள பெண்களும் ஆண்களுமாக மாறுகின்றனர். அதன் பிறகு அவர்களை ஜீவனுக்கு வழி நடத்திய இப்படிப்பட்ட ஆசீர்வாதமான காரியத்தை விட்டு விலகி, அதிக புகழுக்காக, அல்லது உயர்தர வகுப்பினர் என்று அவர்கள் அழைப்பவர்களை சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு சீர்குலைந்து போகின்றனர். 45. நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் என்னும் முறையில் மிகவும் உயர்தர வகுப்பினரை சேர்ந்தவர்களாயிருக்கின்றீர்கள். நான் ராஜாக்களின் அதிபதிகளின் நட்பைக் காட்டிலும் இவர்களுடைய நட்பையே விரும்புவேன். வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத இந்த எளிய கூட்டத்தினரை எனக்குத் தாருங்கள். இவர்கள் தேவனை அறிந்து, அவரை நேசித்து, அவரை சேவிக்கும் வரைக்கும், என்னைப் பொறுத்த வரையில் இவர்களே பரலோகத்தில் மேன்மையானவர்கள். ஆம், ஐயா! 46. ஏவாள் சாத்தானால் மிகவும் எளிதாக தேவனுடைய வார்த்தையிலிருந்து விலக்கப்பட்டாள் என்று நாம் காண்கிறோம். அவள் தன் சுயபுத்தியின் மேல் சாய்ந்தாள். ஏனெனில் சாத்தான், அவள் தேவனைக் குறித்து கொண்டிருந்த உண்மையான கருத்துக்கு மாறான ஒன்றை அவளுக்கு அளித்தான். சத்துருவாகிய சாத்தான் வேறுபட்ட ஒன்றை அவளிடம் கூறினான். அவள் அதை விசுவாசித்தாள். 47. அதன் விளைவுகளை நாம் காண்கிறோம். அது மனிதகுலம் முழுவதையுமே மரணத்தில் ஆழ்த்தியது. இப்பூமியிலிருந்த முதல் தாய் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள தன் சுயபுத்தியின் மேல் சாய்ந்து மனிதகுலம் முழுவதையுமே மரணத்தில் ஆழ்த்தினாள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர்-ஆசி). அப்படித் தான் வார்த்தை கூறுகிறது. ஒரு ஸ்திரீ எப்பொழுதுமே...... 48. வேதாகமத்தில் சபையானது ஒரு ஸ்திரீக்கு ஒப்பிடப்பட்டு உள்ளது. இன்றைக்கு ஒரு சபை கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு சபையோர் அனைவரையுமே தேவனிடமிருந்து பிரித்து விட முடியும். தேவனுடைய வார்த்தைக்கு பதிலாக இவைகளைக் கைக் கொள்பவர்கள் ஏவாளைப் போல் இருக்கின்றனர். அது மேலும் மேலும் செய்யப்பட்டு, இந்த முழு சந்ததியுமே தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகும்படி செய்துவிட்டது. 49. வார்த்தை வெளிப்படும்போது, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்துள்ளனர். இந்த ஆலயம் இங்கு கட்டப் பட்டது. இது அழகான இடம். இது ஒரு பெரிய ஸ்தாபனம். இது அநேக அங்கத்தினர்களைக் கொண்டது. நாங்கள் ஏன் இதில் சேர்ந்திருக்கக் கூடாது. இதை நான் நம்புகிறேன். உன் சுயபுத்தியின் மேல் நம்பிக்கை வைக்காதே, தேவனுடைய வார்த்தையை நம்பு! 50. அது மனித குலம் அனைத்துக்கும் மரணத்தில் முடிவடைந்தது. நான் கூறினது போன்று இப்பொழுதும் அப்படித் தான் தங்கள் சுயபுத்தியின் மேல் சார்ந்து உள்ளவர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கைக் கொண்டு, தேவனுடைய வார்த்தை முற்றிலும் உண்மையல்ல, அவைகளில் சில பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டது. மற்றவை அல்ல' என்கின்றனர். ஒரு பாகம் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டதும், மற்ற பாகம் அருளப்படாததுமான அப்படிப்பட்ட ஒரு வேதாகமத்தின் மேல் உங்களுக்கு எப்படி விசுவாசம் இருக்க முடியும்? ஒரு வசனம் தவறாய் இருந்தால் முழுவதுமே தவறாய் இருக்கக் கூடும். அதிலுள்ள எல்லாமே சரியாயிருக்க வேண்டும், முற்றிலும் உண்மை. 51. வேதாகமப் பள்ளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சில சீர்குலைந்த, பள்ளிகள் மனித அறிவை போதித்து வருகின்றன. அவர்கள் ஒரு ஆலோசனை சங்கம் கூட்டி, ஒன்றாக உட்கார்ந்து கொண்டு, "பாருங்கள், அற்புதங்களின் நாட்கள் அப்போஸ்தலர் காலத்துடன் முடிவு பெற்று விட்டன என்று தீர்மானம் செய்கின்றனர். பேராயர் அல்லது உயர் பதவியிலுள்ள மனிதரின் கீழுள்ள அநேகர் அங்கு உட்கார்ந்து கொண்டு, "இந்த தீர்மானத்துக்கு நான் ஆமோதம் தெரிவித்தால், எனக்கு அடுத்தபடியாக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு” என்று எண்ணுகின்றனர். பாருங்கள், அப்படியானால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்காக உங்கள் இரண்டு கால்களில் நிற்பதற்கு பதிலாக உங்கள் சுயபுத்தியின் மேல் சாய்கிறீர்கள். அது தான் இவை உண்டாகக் காரணமாயுள்ளது. 52. சில நாட்களுக்கு முன்பு ஒருவர். எனக்கு வருமான வரி விவகாரத்தில் தகராறு உண்டாயிருந்தது. அவர்கள் என்னிடம், "உங்கள் தர்மக்கர்த்தாக்கள் தலையாட்டி பொம்மைகள் என்று எண்ணுகிறோம்' என்றனர். 53. நான், "என் நிர்வாகக் குழுவிலுள்ள தர்மகர்த்தா ஒருவர் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்து (அது யாராயிருந்தாலும் சரி), அவர் எழுந்து நின்று அதை வெளிப்படையாகக் கூற தைரியம் இல்லாமல் போனால், அவரைக் குழுவிலிருந்து நீக்கிவிடுவேன்" என்றேன். ஆம், ஐயா! அது என் கருத்துக்கு முரண்பட்டதாக இருக்க நேரிட்டாலும். அவர் சரியென்று கருதுவதை வெளிப்படையாகக் கூறுவதையே நான் விரும்புவேன். அதற்காகத் தான் அவரைக் குழுவில் சேர்த்திருக்கிறேன், அவர் என்ன சொல்கிறார் என்று காண, நமக்கு அது உள்ளது. 54. கவனியுங்கள். இயேசு பரி. யோவான் 10-ல், "என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது" என்றார். சத்தம் என்பது அவருடைய வார்த்தை. அவர் பேசும் போது உண்டாவது. "என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது''. அந்த சத்தம் உண்மையென்று அவைகளுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. அது என் சத்தம் என்று உறுதிப்பட்டுள்ளது.' இப்பொழுது கவனியுங்கள். அவை வேறெந்த சத்தத்தையும் கேட்டு பின் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவைகள் அப்படி செய்யாது. "என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது. அவைகள் அந்நியனுக்கு பின் செல்வதில்லை. வேறு விதமாகக் கூறினால், வார்த்தைக்கு முரணாகப் போதிக்கும் வேதசாஸ்திர சத்தத்தை அவைகள் புரிந்து கொள்வதில்லை. நேற்றிரவு நான் கூறினது போன்று, எப்படி கழுகுக் குஞ்சு கோழி இடும் சத்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லையோ, அப்படியே இந்த ஆடுகளும் புரிந்து கொள்வதில்லை. அது கழுகாயிருந்ததனால், அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையாக மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையும் அப்படித் தான் இருக்கிறான். அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய காரியங்களை மாத்திரமே புரிந்து கொள்ள முடியும். 55. யாராகிலும் ஒருவர், "நல்லது. பாருங்கள், நீங்கள் இதை செய்யலாம் என்று நினைக்கிறேன். இது அப்படியல்ல என்று நினைக்கிறேன். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. எனவே அது தெய்வீக சுகமளித்தல் அல்ல என்று நினைக்கிறேன். இதை நான் விசுவாசிப்பதில்லை எனலாம். இப்படிப்பட்டவை உண்மையான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனின் செவிகளில் விழவே விழாது. அவனால் இதை புரிந்து கொள்ள முடியாது. தேவனை விசுவாசித்து, வேதாகமத்தை படித்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று அறிந்துள்ளவன், இப்படிப்பட்ட ஒன்றை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று எனக்கு புரியவேயில்லை. எனவே தேவனுடைய பிள்ளைகள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்வதில்லை. 56. அது ஒரு குழந்தையைப் போல். பிறந்த ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு முறை தன் தாயின் மார்பின் மேல் சாய்ந்து, அதன் தலையை அவள் மார்பின் மேல் வைத்து, அந்த மித வெப்ப பாலைக் குடித்து விடட்டும். அது பிறந்து சில மணி நேரம் தான் ஆனபோதிலும் அது அப்படி செய்கிறது. ஓரிரண்டு நாட்கள் கழித்து, அதை தாயினிடமிருந்து பிரித்து, வேறொரு தாயின் மார்பிலிருந்து பாலைக் குடிக்கச் செய்வீர்களானால், அது கால்களை உதைத்து உரக்க அழ ஆரம்பித்து விடும். அவள் அதன் தாய் இல்லை என்பதை அறிந்து கொள்கிறது. பாருங்கள், அதற்குள் ஏதோ ஒன்று உள்ளது. ஏனெனில் அது தன் தாயின் பாகமாக உள்ளது. தன் சொந்த தாயை அறிந்து கொள்ள இயற்கை அதற்கு ஒரு வழியை வகுத்து தந்துள்ளது. 57. ஒரு குழந்தைக்கு, தன் தாயை அறிந்து கொள்ள, அது எங்கிருந்து பிறந்தது என்று அறிந்து கொள்ள, இயற்கை ஒரு வழியை வகுத்திருக்குமானால், தேவனுடைய ஆவியினால் பிறந்த தேவனுடைய குமாரன் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்க வேண்டும்! அவன் தன் தாயை அறிந்திருக்கிறான். ஏனெனில் அவன் வார்த்தையினால் பிறந்து, வார்த்தையை புரிந்து கொண்டு இருக்கிறான். அவனை வேறு இடத்தில் வைத்துப் பாருங்கள். அந்த இடத்தில் அவன் பொருந்த மாட்டான். அவனால் முடிந்த வரை அங்கிருந்து வேகமாக வெளி நடந்து விடுவான். ஏனெனில் அவன் தன்... யாராவது ஒருவர் அவனிடம், 'குழந்தாய், இது உன் தாய்' என்று கூறினார் என்று வைத்துக் கொள்வோம். 58. அவள், அவன் தாய் அல்ல என்பதை அவன் அறிந்து கொள்வான். அவன் தன் தாயின் ஒரு பாகம் என்பதை அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு வழி உண்டு. அவனுடைய தாயின் ஸ்தானத்தை யாருமே எடுத்துக் கொள்ள முடியாது. அவன் தன் தாயை அறிந்திருக்கிறான். அது எவ்வளவு உண்மை என்று பாருங்கள். தேவன் எல்லாவற்றையுமே அதனதன் ஜாதியின்படியே சிருஷ்டித்திருக்கிறார். 59. கால்நடை அதன் ஜாதியின்படியே. அநேக சமயங்களில் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் வளைத்து கீழே கொண்டு வரும்போது, கன்றுக்குட்டிகள் எப்படி தங்கள் தாய் மாடுகளை அறிந்து கொள்ளும் என்று நான் வியந்தது உண்டு. மலைகளிலிருந்து அவை கீழே இறங்கி வரும் போது எல்லாம் ஒன்றாக கலந்திருக்கும். கன்றுக்குட்டியுடன் கூடிய பசு - ஒரு கன்றுக்குட்டி உண்மையில் பசியாயிருந்தால், ஒருக்கால் வேறு தாயிடமிருந்து சிறிது பால் குடிக்க வகையுண்டு. ஆனால் அவை மேய்வதற்கென நாங்கள் அங்கு புல்வெளியில் இவைகளை நிறுத்தியிருக்கும் போது, தாய் பசு, பசுக்களும் கன்றுக்குட்டிகளும் கொண்ட கும்பலின் வழியாக தன் கன்றுக்குட்டியை தேடி ஓடுகிறது. கன்றுக்குட்டியும் தன் தாயினிடத்தில் ஓடி வருகிறது. அது தாயின் குறிப்பிட்ட சிறு ஊளையையும் சப்தத்தையும் அறிந்து உள்ளது. தாய் தன் கன்றுக்காக சப்தமிடுகிறது. அப்படியே மற்ற தாய் பசுக்களும் சப்தமிட்டு, அநேக விதமான சப்தங்கள் அங்கு எழும்பி, நம்மை ஒன்றும் கேட்கக் கூடாதபடிக்கு செய்து விடுகிறது. ஆனால் இந்த அனைத்து சப்தங்களின் நடுவில், அந்த கன்றுக்குட்டி தன் தாயின் பிரத்தியேக அழைப்பை அறிந்து கொள்கிறது. ஏனெனில் அது அதன் தாயின் ஒரு பாகமாக உள்ளது. 60. அவ்வாறே பரலோகத்திலிருந்து மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும் இந்த வார்த்தையின் ஒரு பாகமாயிருக்கிறான். உண்மை. அவன் மற்றொரு தாயின் பின் செல்வதில்லை. அவன் வார்த்தையில் நிலைத்திருக்கிறான். "எக்காளம் விளங்காத சத்தமிட்டால், எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?" என்றான் பவுல் (1.கொரி.-14:8). அவன் வார்த்தையின் சத்தத்தை அறிந்து இருக்கிறான். தேவனுடைய கரம் அவர்களை எப்படி பின் தொடருகிறது என்பதை கவனியுங்கள். அவன் அதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறதை அறிந்திருக்கிறான், அவன் சுவிசேஷ சத்தியத்தில் நிலைத்திருக்கிறான். அவன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பதை அறிந்திருக்கிறான். தேவனுடைய ஆவி தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க முடியாது என்பதை அறிந்து இருக்கிறான். எனவே அவன் அந்நியனுக்குப் பின் செல்வதில்லை. கவனியுங்கள் எப்படி ...... 61. நான் எழுதி வைத்துள்ள குறிப்பு ஒன்றைக் காண நேர்ந்தது. அதை நான் கடந்து வந்து விட்டேன். அந்த வேத வாக்கியத்தை நான் காண நேர்ந்ததால், அதை குறிப்பிடலாமென்று எண்ணினேன். நமக்கிருந்த மிக மகத்தான வேத சாஸ்திரிகளின் காலத்தில், அவருடைய சொந்த முன் குறிக்கப்பட்ட ஆடுகள் எப்படி அவருக்குப் பின் சென்றன என்று கவனியுங்கள். அவர்கள் அவரை அறிந்திருந்ததனால் வெளி வந்தனர். அந்த காலத்துக்கு வார்த்தை என்ன வாக்குத்தத்தம் செய்திருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மேசியா வரும் போது அவர் எப்படியிருப்பாரென்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சீமோன் போதும்... அவரிடம் வந்தான்... அப்பொழுது அவன் 'சீமோன்' என்னும் பெயரை மாத்திரம் உடையவனாயிருந்தான்... 62. அந்திரேயா அவனிடம் “இவர் மேசியா' என்று கூறி நம்ப வைக்க முயன்றான். அது சீமோன் தலையில் நுழைவது சிறிது கடினமாயிருந்தது. அவன் போகவில்லை, 63. ஆனால் அவன் இயேசுவின் சமூகத்தில் வந்த போது, இயேசு, "உன் பெயர் சீமோன். நீ யோனாவின் குமாரன்" என்றார். இயேசு அவர்களுடைய சீஷர்கள் இடம், உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர்களை அறிந்ததாக கூறினார். அவர்கள் அவருடைய சிந்தனையின் தன்மைகளாயிருந்தனர். எனவே அந்த வித்து அவனுக்குள் இருந்ததனால், மேசியா தீர்க்கதரிசியாயிருப்பார் என்று வார்த்தை உரைத்திருந்ததை அவன் அறிந்திருந்தான். அவன் அதைக் கண்ட போது மீன் பிடிப்பதை நிறுத்தி விட்டான். அவன் தன் வலையைக் கீழே போட்டு விட்டு மனுஷர்களைப் பிடிக்கிறவனாகிவிடுவான் என்பதை அறிந்து இருந்தான். 64. அங்கு நின்று கொண்டிருந்த மற்றவர்கள் அதையே கண்டு, அது பொல்லாத ஆவி" என்றனர். அப்படி சொன்னது வேத சாஸ்திரிகள். ஏனெனில் அது அவர்களுடைய வேத சாஸ்திர போதகங்களுடன்' ஒத்துப் போகவில்லை. அவர்கள் தங்கள் உபதேசத்தின் காரணமாக சுயபுத்தியின் மேல் சாய்ந்து இருந்ததனால், அதைப் புறக்கணித்தனர். வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக இயேசு வந்தபோது, அவர்கள் அதைக் காண கூடாதபடிக்கு மிகவும் குருடாய் இருந்தனர். அவர்கள் தேவன் கூறினதன் மேல் சாய்ந்திருப்பதற்கு பதிலாக ஆசாரியர்கள் கூறின தன் மேலும் சபை கூறினதன் மேலும் சாய்ந்திருந்தனர். 65. அதற்காக இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். அவர், "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று உரிமை கோருகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. நான் உங்களை ஆராயச் சொல்லும் இந்த வேத வாக்கியங்கள், நான் யாரென்பதை உங்களுக்கு அறிவிக்கும்" என்றார். (யோவான்.5:39). 66. ஆனால் அவர்கள் வார்த்தை கூறிய தன் மேல் சாய்ந்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் சுய புத்தியின் மேல் சாய்ந்திருந்தனர். அவர்களுடைய கண்கள் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்ததாக வேதம் உரைக்கிறது. அவர்கள் உடைய வேதசாஸ்திரம் என்னும் திரை அவர்களை குருடாக்கியிருந்தது. நீங்கள், "சகோ. பிரன்ஹாமே, என்ன கூற முயல்கிறீர்கள்?" எனலாம். 67. இதை தான் கூற விரும்புகிறேன். அது மறுபடியும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆண்களும் பெண்களும், தேவனுடைய வார்த்தை என்ன கூறின போதிலும், அவர்கள் சேர்ந்து கொண்ட குறிப்பிட்ட சபையின் மேல் சாய்ந்து உள்ளனர். அவர்கள் அப்படியே தொடர்ந்து சென்று, தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து. தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் எழுதி வைக்கப்படாதது போல் அதை அசட்டை செய்கின்றனர். அது ஜீவனே இல்லாத விதை. அது மாமிச பிரகாரமான ஜீவனைப் பெற்றுள்ளது. ஆனால் உயிர்ப்பிக்கப்பட ஆவிக்குரிய ஜீவன் அங்கில்லை. அவர்கள் முகத்தின் மேல் திரையிருந்தது. 68. இப்பொழுது கவனியுங்கள், தேவன் எப்படியிருக்க வேண்டும், மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள் தங்கள் சொந்த கருத்தைக் கொண்டு இருந்தனர். ஆனால் மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று வார்த்தை அறிவித்திருந்தது. இப்பொழுது பாருங்கள், மேசியா எப்படி இருக்க வேண்டும் என்று தங்கள் சுயபுத்தியில் விளைந்த கருத்தை அவர்கள் உடையவர்களாய் இருந்தனர். பிரதான ஆசாரியன், “எனக்குக் கீழுள்ள ஆசாரியர்களே, மேசியா வரும்போது... நாம் பெரிய தேவாலயத்தை இங்கு கட்டி வைத்திருக்கிறோம். நாம் இதையெல்லாம் செய்திருக்கிறோம். "அவர் தம்முடைய ஆலயத்துக்கு தீவிரமாய் வருவார்" என்று வேதம் உரைக்கிறது (மல்.3:1). எனவே மேசியா வரும் போது, இந்த ஆலயத்துக்கு வந்து, அவரை நமக்கு அடையாளம் காண்பித்து, 'நான் தான் மேசியா. நான் வந்துவிட்டேன். நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த மேசியா நானே' என்பார்' என்று சொல்லியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் வந்தபோதோ, அவர்கள் நினைத்திருந்ததைக் காட்டிலும் வித்தியாசமான முறையில் வந்ததால், அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் யாரென்று அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆனால் அவருடைய... 69. யாராவது ஒரு மாய்மாலக்காரன் அங்கு நடந்து சென்று, "நான் தான் மேசியா. நான் டாக்டர் இன்னார் இன்னார்' என்று கூறியிருந்தால், அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். 70. ஆனால், அவர்கள் சந்தேகமான பிறப்பைக் கொண்ட, எந்த பள்ளியிலும் கல்வி பயிலாத, எந்த வேதசாஸ்திர கல்லூரியிலும் படிக்காத, ஐக்கியச்சீட்டு எதையும் பெற்றிராத ஒரு மனிதனைக் கண்டனர். ஆனால் அவரோ தேவனுடைய வார்த்தையின் நிறைவேறுதலாக வந்தார். "நான் செய்கிற கிரியைகள் நான் யாரென்பதை அறிவிக்கும். நான் செய்வேன் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிரியைகளை நான் செய்யாமல் போனால். என்னை விசுவாசிக்காதீர்கள்.' 71. அதை இந்நாளுக்கு நாம் பொருத்தலாம் அல்லவா? பரிசுத்த ஆவி வந்திருக்கும் போது, அவர்கள் அதை வேறொரு காலத்துக்குப் பொருத்தப் பார்க்கிறார்கள். அவர் நித்திய ஜீவனின் வல்லமையைக் கொண்டவராய் கிரியை செய்து கொண்டிருக்கும்போது, அவர்கள் அதை காட்டுத்தனமான மூட மதாபிமானம் என்கின்றனர். ஏன்? அவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் மேல் சாய்ந்திராமல், தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்துள்ளனர். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். 72. வாக்குத்தத்தம் நிறைவேறுவதே அதற்களிக்கும் வியாக்கியானம். அப்படித் தான் அது அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். 73. அதை ''இன்னும் சிறிது தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேவன் வார்த்தையை உரைக்கும்போது, அதன் அர்த்தம் என்னவென்று கூற அவருக்கு எந்த மனிதனும், ஸ்திரீயும், வேறு யாரும் தேவையில்லை. அவர் உரைத்த போது... நீங்கள். அந்த அர்த்தத்தில் தான் தேவன் உரைத்தார்' எனலாம். தேவன் உரைப்பது என்னவோ, அது தான் அதன் அர்த்தம். பாருங்கள்? 74. அவருடைய சொந்த வார்த்தையை அவர் எப்படி வியாக்கியானப்படுத்து-கிறார்? அதை நிறைவேற்றுவதன் மூலமே. "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்" என்று வேதம் உரைத்தது. அவ்வாறே கன்னிகை கர்ப்பவதியானாள். அதற்கு வியாக்கியானம் எதுவும் தேவையில்லை. வெளிச்சம் உண்டாகக்கடவது' என்று தேவன் உரைத்தார். அவ்வாறே வெளிச்சம் உண்டானது. அதற்கு வியாக்கியானம் எதுவும் தேவையில்லை. 75. கடைசி நாட்களில் தேவன் "மாம்சமான யாவர் மேலும் தம்முடைய ஆவியை ஊற்றுவார்' என்றும் கூட கூறினார். அவர் அதை நிறைவேற்றினார். அதற்கு வியாக்கியானம் எதுவும் தேவையில்லை. தேவனே தமது சொந்த வார்த்தைக்கு வியாக்கியானம் அளிக்கிறார். தேவன் கடைசி நாட்களில் செய்யப் போவதாக வாக்குத்தத்தம் பண்ணினவை நிறைவேற்றிக் கொண்டு வருவதை நாம் ஒவ்வொரு நாளும் கண்கூடாகக் காண்கிறோம். 76. அன்று போல் இன்றும் மக்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்துள்ளனர். "எங்கள் போதகர் அது முட மதாபிமானம் என்று கூறுகிறார். ஆனால் அது நிறைவேறும் என்று வேதம் கூறுகிறது. யாருடைய புத்தியின் மேல் நீங்கள் சாய்ந்திருக்கப் போகிறீர்கள்? 77. கடைசி நாட்களில் லவோதிக்கேயா சபை காலம் ஐசுவரியமுள்ளதாய். தனக்குப் போதுமான அளவுக்கு எல்லாவற்றையும் பெற்றிருக்கும் என்று வேதம் உரைக்கிறது. "நான் ஐசுவரியவான். எனக்கு ஒரு குறைவுமில்லை. நான் ராணியைப் போல் வீற்றிருக்கிறேன்.” அது அந்த சபை காலம் முழுவதிலும், சபை-! "லவோதிக்கேயா சபைக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: நீ நிர்வாணியும், குருடனும், தரித்திரனும், பரிதபிக்கப்படத் தக்கவனுமாயிருக்கிறதை அறியாமல் இருக்கிறாய்!' அவள் தன் ஐசுவரியத்தில் உட்கார்ந்து கொண்டு, கோடிக்கணக்கான அங்கத்தினர்களைக் கொண்டவளாய், ஏறக்குறைய உலகத்தின் ஐசுவரியம் அனைத்தும் தன் கையில் கொண்டவளாய் இருக்கிறாள். இன்று கத்தோலிக்க சபையும் பிராடெஸ்-டெண்டுகளும் ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றனர். இவ்விரு சாராருடைய ஐசுவரியத்தையும் இன்று ஒருமித்து கணக்கிட்டு நோக்கினால், அவர்கள் உலகத்தின் ஐசுவரியத்தைக் கொண்டுள்ளனர். இந்த நாட்டின் பொருளாதாரம் மோசமாகத் தொடங்கி விட்டது. நாம் வரிப் பணத்தின் மேல் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். அது 40-ஆண்டுகள் கழித்து செலுத்தி தீர்க்கப்பட வேண்டும். அப்படித்தான் அவர்கள் 'லைஃப் லைன்' என்னும் வானொலி நிகழ்ச்சியில் கூறினர். நாம் இப்பொழுது செலவழிக்கும் வரிப்பணம் 40-ஆண்டுகள் கழித்து செலுத்தப்பட வேண்டும். இயேசு வரத் தாமதித்தால், என் பேரமகனுக்கு 40 வயதாகும்போது அவன் செலுத்த வேண்டிய பணத்தை இப்பொழுது நாம் செலவழித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் அந்நிய நாடுகளுக்கு உதவி அனுப்புகிறோம். ஆனால் நமக்குச் சொந்தமான சிகப்பு இந்தியர்கள் பட்டினியால் சாகின்றனர். ஐக்கியத்தை வாங்க முயலுதல். நீங்கள் ஐக்கியத்தை வாங்குவது கிடையாது. நீங்கள் நண்பனை வாங்குவது கிடையாது. ஆனால் அதை தான் நாம் செய்கிறோம். அப்படித்தான் நமது அமைப்பு உள்ளது. ஜனங்களின் மேல் வரி, வரி, வரி சுமத்திக்கொண்டே செல்கிறோம். நாம் சண்டையில் பட்ட கடன்கள் இன்னும் நூற்றாண்டுகளாக கட்டினாலும் தீராது என்று நினைக்கிறேன். அரசியல்வாதிகள். நம்மை இந்த கடனில் ஆழ்த்தினர். நாம் அப்படியிருக்கக் கூடாது. நாம் அப்படியிருக்க வேண்டிய காரணம் எதுவுமில்லை. 79. ஆனாலும் சபைகளோ ஐசுவரியமுள்ளதாகிவிட்டன. "கத்தோலிக்க சபையில் ஏறக்குறைய உலகத்தின் ஐசுவரியம் அனைத்தும் உள்ளது. ஆகையால் தான் ருஷியா அவளை துரத்தி விட்டது. அது தான் கம்யூனிஸக் கொள்கையின் அடிப்படை. சபை வேறுவிதமாக இருக்கக் கற்பிக்கப்பட்ட போதிலும், அதற்கும் உலகத்திலுள்ள மற்றவர்க்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. 80. நாங்கள் பின்லாந்திலிருந்த போது, மரித்து போன சிறுவன் உயிரோடு எழுப்பப்பட்டான். அப்பொழுது அங்கிருந்த ருஷிய இராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி, "மரித்தோரை உயிரோடெழுப்பும் அப்படிப்பட்ட தேவனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்றனர். 81. நாம் ஸ்தாபனங்களை உண்டாக்கி, பள்ளிகளை நிறுவி, கட்டிடங்களைக் கட்டி, அதே சமயத்தில் “சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று இயேசு நமக்குக் கட்டளையிட்டதை செய்யத் தவறி விட்டோம். அவர் ஒரு போதும், "உலகத்துக்கு கல்வி கற்றுக்கொடுங்கள், கல்வி கற்றவன் இரட்சிக்கப்படுவான்" என்று கூறவில்லை. நீங்கள் மறுபடியும் பிறந்து, ஆவியினால் நிறையப்பட வேண்டும். ஆகையால் தான் நாம் பயங்கரமாகத் தவறி விட்டோம். பாருங்கள், நமக்கு ஐசுவரியம் உண்டு, நமக்கு அது உண்டு. 82. இப்பொழுது என்ன நடக்கப் போகிறது? இந்த சபைகள் அனைத்தும் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் ஒன்று சேரும் போது, அதற்கு தலைமை வகிக்கப் போகிறவர் யாரென்று உங்களால் காண முடியவில்லையா? மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்களாகிய நீங்களும், மற்றவர்களும், பெந்தெகொஸ்தேயினரும் கூட இதை காண முடியவில்லையா? நீங்கள் அதில் சேரப் போவதில்லையென்று கூறுகின்றீர்கள். நீங்கள் அதில் சேர வேண்டும், இல்லையென்றால் உங்கள் ஸ்தாபனத்தை கலைத்து விட வேண்டும். இதில் ஏதாவதொன்றை செய்ய வேண்டும். இது உங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை செய்தே ஆக வேண்டும் . அது மிருகத்தின் முத்திரையை உங்கள் மேல் கட்டாயமாகப் போடுவதாகும். அது தான் அது. ஸ்தாபன முறைமை. மிருகத்தின் முத்திரையென்று நான் வேதத்திலிருந்து உங்களுக்கு நிரூபிக்க முடியும். அவள் ஒரு வேசி. அவளுக்கு வேசி குமாரத்திகள் இருந்தனர். அது உண்மையென்று நமக்குத் தெரியும். ஸ்தாபன மார்க்கம் வார்த்தைக்கு முரணானது. அதன் கொள்கைகளில் அது அந்திக்கிறிஸ்து. அதிலுள்ள எல்லாமே அந்திக் கிறிஸ்து அல்ல, அதன் கொள்கைகளில், அதன் முறைமையில் அது அந்திக் கிறிஸ்து. ஏனெனில் அது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயுள்ளது. ஸ்தாபன முறைமை ஒவ்வொன்றும் அவ்வாறுள்ளது. 83. அவர்களைப் பார்த்தீர்களா, நீங்கள் தேவனுடைய புத்தியின் மேல் சாய்வதற்கு பதிலாக - அவர் அதைக் குறித்து என்ன கூறினார் என்பதன் மேல்- வேறு யாரோ ஒருவருடைய புத்தியின் மேல் சாய்ந்து கொண்டு இருக்கிறீர்கள். ஆகையால் தான் அது தவறாயுள்ளது. பையன்கள் வேதாகமப் பள்ளிகள் என்று அழைக்கப்படுபவைகளில் சேர்ந்து கொண்டு நல்ல கல்வியைப் பெறுகின்றனர். ஒருக்கால் அவர்களுடைய இருதயத்தில் அவர்களுக்கு தேவனுடைய அழைப்பு இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்களோ அதில் சேர்ந்து கொண்டு ஒரே ஒரு கருத்தை உடையவர்களாய். இன்னார் இன்னார் அப்படி கூறினார், பேராயர் இன்னார் இன்னார் இப்படி கூறினார். அவர் அப்படி கூறினார். மனிதரின் ஆலோசனை சங்கம், இது இப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்துள்ளது' என்கின்றனர். 84. யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. "நான் சத்தியபரர், எல்லா மனுஷரும் பொய்யர். அது யாருடைய வார்த்தைகளாக இருந்த போதிலும், என் வார்த்தையே சத்தியம் என்று இயேசு கூறியுள்ளார். 85. நாம் சத்தியம் என்று ஒன்றை எப்படி அறிந்து கொள்வது? ஒன்று நடக்கும் என்று வேதாகமம் உரைத்து, அது அதேவிதமாக நடக்குமானால், அது சத்தியம். 86. "அவளிடம் உலகத்தின் ஐசுவரியம் - பொன், வெள்ளி - இருக்கிறது" என்று வேதம் உரைக்கிறது. 87. பொன் நிர்ணயத்தில், நாம் கடன்காரராகி விட்டால் என்ன நடக்கும்? என்ன நடக்கும்? இந்நாட்டின் பணக்காரர், பெரிய தொழில் அதிபர்கள், விஸ்கிகாரர்கள், புகையிலைகாரர்கள் அங்கு நின்று கொண்டு தங்கள் நாணயத்தை மாற்றப் போவதில்லை. எனவே நாம் செய்யக்கூடிய ஒன்றேஒன்று கடன் வாங்குவதே. அப்படி செய்யும்போது, நம்முடைய பிறப்புரிமையை நாம் அதற்கு விற்று விடுகிறோம். அது உண்மை. அப்படியானால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அந்த முறைமை உங்களை சொந்தமாக்கிக் கொள்கிறது. நீங்கள் வேறொன்றும் செய்ய முடியாது. 88. ஓ, ஜனங்களே, நீங்கள் நினைக்க வேண்டாம் நான்... நான் பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மரணத்தின் விளைவாக என் சத்தம் அமைதியான பின்பும், இந்த ஒலிநாடாக்கள் போட்டு கேட்கப்படும். அப்பொழுது நான் கூறினது நிறைவேறிவிட்டது என்பதை அறிந்து கொள்வீர்கள். இந்த காரியத்துக்கு விரோதமாக நான் எடுத்துக் கொண்டுள்ள ஒரு நிலை தேவனுக்கு விரோதமாக இருக்கும். ஆனால் நான் இந்த நிலையில் உறுதியாய் நிற்கக் காரணம் என்னவெனில், அதை நான் வார்த்தையில் காண்கிறேன். இது தேவனுடைய வார்த்தை. அது உறுதிப்படுத்தப்பட்டு அது உண்மையென்று நிரூபிக்கப்படுவதை நான் காண்கிறேன். அது தான் தேவன் தமது வார்த்தைக்கு அளிக்கும் வியாக்கியானம். தேவன் தமது வார்த்தைக்கு அளிக்கும் வியாக்கியானம், அதை உறுதிப்படுத்தி அதை உண்மையாக்குவதன் மூலமே. 89. இந்த பரிசேயர் ஏன் குருடாயிருந்தனர்? அவர்களை அவ்வளவு குருடாகச் செய்தது எது? ஏனெனில் அவர்கள் வார்த்தையின் வெளிப்பாட்டை அல்லது அது உறுதிப்படுதலை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். 90. அதன் காரணமாகத் தான் சபைகள் இன்று குருடாயுள்ளன. அவர்கள் வார்த்தை வெளிப்பட்டு உறுதிப்படுவதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். வார்த்தை ஒன்றைக் கூறி, அது வெளிப்படுத்தப்பட்டு, அதன் பின்பு அது நிரூபிக்கப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். 91. ஆகையால் தான் இந்த யூதர்கள் இன்று வரைக்கும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களிடத்தில் நீங்கள் கிறிஸ்துவைக் குறித்து பேச முடியாது. ஏனெனில் அந்த திரை அவர்கள் முகத்தின் மேல் இப்பொழுதும் இருந்து கொண்டு அவர்கள் பார்வையை மறைக்கிறது. 92. அவ்வாறே சபையினிடத்தில் நீங்கள் முழு சுவிசேஷத்தையும் தேவனுடைய வல்லமையையும் குறித்து பேச முடியாது. ஏனெனில் இப்பிரபஞ்சத்தின் தேவன் அவர்கள் தேவனுடைய சத்தியங்களைக் காணக் கூடாதவாறு அவர்கள் கண்களை குருடாக்கியுள்ளான். அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்துள்ளனர். ஸ்திரீகள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்து சபைக்கு வருகின்றனர். ஏனெனில் அவர்களுடைய போதகர்கள், ஒ, அதனால் பரவாயில்லை. அந்த மனிதனுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது' என்கின்றனர். ஆனால் வேதாகமோ அவள் அப்படி செய்வது தவறு என்று உரைக்கிறது. அப்படிப்பட்ட சில ஸ்திரீகள் போதகராவதன் மூலம் மற்றொரு அவமானமான செயலைப் புரிந்து. இரட்டிப்பாக தவறு செய்கின்றனர். இவ்விரண்டையும் ஸ்திரீகள் செய்யக் கூடாதென்று வேதம் திட்டவட்டமாக போதிக்கிறது. ஆனால் சபை ஸ்தாபனமோ அப்படிப்பட்ட செயல்கள் புரிந்தோரை ஏற்றுக் கொண்டு, அவர்களை போதகராகவும் அபிஷேகம் செய்து வெளியே அனுப்புகின்றன. அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து உள்ளனர். 93. தேவனுடைய வார்த்தை ஒன்றை தவறாகப் பொருத்தி, தவறாக அர்த்தம் கொண்டு, அல்லது அதை ஏற்றுக் கொள்ளாமல் போனால், அது சங்கிலி முழுவதையும் முறித்து விடுகிறது. "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையி-னாலும் பிழைப்பான்" (மத். 4: 4). 94. ஸ்திரீகளே, குட்டை கால்சட்டை அணிதல், வர்ணம் தீட்டிக்கொள்ளுதல், தலை மயிரைக் கத்தரித்து அதை அலங்காரம் செய்து கொள்ளுதல் போன்றவைகளுக்கு எதிராக நான் பேசுவதை கேட்கிறீர்கள், இருந்த போதிலும், ஒவ்வொரு ஆண்டு இங்கு நான் வரும்போதும், நீங்கள் அதே நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு காரணம் நீங்கள் கர்த்தருடைய வார்த்தையின் மேல் சாய்ந்திருப்பதற்கு பதிலாக உங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து கொண்டிருக்கிறீர்கள். 95. போதகர்களே, உங்கள் சபையை நீங்கள் ஏன் சுத்தப்படுத்துவதில்லை? ஏனெனில் நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு பதிலாக உங்கள் ஸ்தாபன கோட்பாட்டை கைக் கொள்கிறீர்கள். அது உண்மை. உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதீர்கள். கர்த்தருடைய வார்த்தையின் மேல் சாய்ந்திருங்கள். 96. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாததன் காரணம், தேவனுடைய வார்த்தை உறுதிப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதே. இயேசு, அவர் எப்படி வருவார் என்று கூறியிருந்தாரோ, அதே விதமாக சுவிசேஷத்தைக் கொண்டவராய் வந்தார். அநேக சமயங்களில்... 97. யோவான் ஸ்நானனை அவர்கள் சிறையிலடைத்த போது, அவனுக்கு சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவன் அங்கு சென்று..... அவன், "மேசியா வருகிறார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்" என்றான் (லூக்.3:17). அவனுக்குள்ளிருந்த தேவனுடைய ஆவி நீரூற்றைப் போல் பொங்கி வெளியே வந்து இவைகளை அறிவித்தது. இயேசு வந்தபோதோ அவர் சாந்தகுணமுள்ளவராகவும், தாழ்மை உள்ளவராகவும், எல்லாரும் அவரை இங்கும் அங்கும் தள்ளுவதை யோவான் கண்டான். அவர்கள்...... 98. யோவானால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவன் தன் சீஷர்களில் சிலரை இயேசுவிடம் அனுப்பி, வருகிறவர் அவர்தானா என்று கேட்டான். இயேசுவுக்கு அது என்ன ஒரு மரியாதை கேடு! தீர்க்கதரிசி தண்ணீரில் தேவனுடைய வார்த்தையாகிய அவருடன் நின்று கொண்டு, "அவரை நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் வானத்திலிருந்து புறாவைப் போல் அவர் மேலிறங்கி அவருக்குள் செல்வதைக் கண்டேன். 'இதோ என் நேசகுமாரன்', என்று வானத்திலிருந்து உண்டான ஒரு சத்தத்தையும் கேட்டேன்" என்றெல்லாம் சொல்லி விட்டு, வருகிறவர் நீர் தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா?" என்று சீஷர்களிடம் கேட்டு அனுப்புகிறான். – 99. அவன் சிறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த சபையை அவன் சேர்ந்திருக்க வேண்டும் என்பதைக் குறித்த ஒரு புத்தகத்தை இயேசு அவனுக்கு அனுப்பி வைக்கவில்லை. அவர் யோவானின் சீஷர்களிடம், "இங்கு சிறிது நேரம் தங்கியிருந்து என்ன நடக்கிறதென்று பார்த்து விட்டு, அதன் பிறகு நீங்கள் கண்டவைகளை யோவானிடம் போய்ச் சொல்லு-ங்கள்" என்றார். ஏனெனில் அவர் செய்த கிரியைகளே அவரை மேசியா, தேவனுடைய குமாரன் என்று உறுதிப்படுத்துகின்றன. “என் இடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்" (மத்.11 : 6). 100. அநேகம் பேர் இடறலடைந்து விட்டனர். தேவனுடைய வார்த்தையின் நிமித்தம் அநேகர் எளிதில் இடறலடைந்து விடுகின்றனர். அது முரணாய் உள்ளது. அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருக்க பிரியப் படுகின்றனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள பிரியப் படுவதில்லை. அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட வழியில், அவர்கள் சபை சாய்ந்து உள்ள வழியில் அவர்கள் செல்ல விரும்புகின்றனர். இன்று காலை மழையை பெய்யப்பண்ணுவதாக தேவன் வாக்களித்திருந்து, அவர்களுடைய சபை 'அது மூடத்தனம்' என்று கூறுமானால், அவர்கள் தேவனுக்குப் பதிலாக தங்கள் சபை கூறுவதையே விசுவாசிப்பார்கள். ஏன்? அவர்கள் சபையினால் பிறந்தவர்கள். 101. ஆனால் தேவனால் பிறந்த எவனும் தேவனுடைய வித்தாயிருக்கிறான். தேவனுடைய வித்து தேவனுடைய வார்த்தையே. அவன் அதைக் கொண்டு தான் ஜீவிக்கிறான். அது தான் அவன் ஜீவன். 102. அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையின் மேல் சாய்ந்திருக்க பிரியமில்லை. அவர்கள் அதைக்காட்டிலும் அதிகம் அறிந்திருந்ததாக எண்ணியிருந்தனர். அது வேதத்தில் உள்ளது. அவர்கள் இயேசுவை பிசாசு பிடித்தவன் என்று அழைத்தனர். ஏன்? அவர்களுடைய ஆசாரியன், 'அந்த மனிதன் பேசுவதைக் கேட்கச் செல்லும் எவரும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படுவார்கள்' என்று கூறியிருந்தனர். 103. ஒரு காலத்தில் குருடாயிருந்தவன் இயேசுவின் மூலம் பார்வையடைந்த போது, அவனுடைய பெற்றோருக்கு அதைக் குறித்து மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்தது. ஆயினும் இயேசு தான் அதை செய்தார் என்று பகிரங்கமாக அறிக்கையிட, அவர்கள் பயந்தனர். ஆம், அவர்கள் சொன்னார்கள்....... அவர்கள், இவன் உங்கள் குமாரனா-? என்று கேட்டார்கள். பெற்றோர், "ஆம்" என்றனர். "அவனைக் குணமாக்கினது யார்? 104. "எங்களுக்குத் தெரியாது. இவன் வயதுள்ளவனாயிருக்கிறான். இவனைக் கேளுங்கள். இவனே சொல்லுவான்.' 105. ஏனெனில் அவர்களுடைய புத்தியின் மேல் சாய்ந்திருப்பதற்கு பதிலாக கிறிஸ்துவின் புத்தியின் மேல் சாய்ந்திருப்பவன் எவனும் ஜெப ஆலயத்துக்கு புறம்பாக்கப்படுவான் என்று கூறப்பட்டிருந்தது. இன்றைக்கும் அதே நிலையில் உள்ளது அல்லவா? (சபையோர் "ஆமென்! என்கின்றனர் - ஆசி). அது உண்மை. அவர்கள் அதையே இன்றும் செய்கின்றனர். தேவன் என்ன செய்த போதிலும், அது அவர்களுடைய புத்தியை அனுசரித்து இருக்க வேண்டுமேயொழிய, தேவன் சத்தியம் என்று உறுதிப்படுத்துவதை அனுசரித்து அல்ல என்பதே அவர்களுடைய கருத்து. பார்வையடைந்தவன் அதற்கு சரியான பதிலை வைத்து இருந்தான். “உன்னை குணமாக்கினது யார்?" "நாசரேத்தூரானாகிய இயேசு என்பவர்.' "இவன் பாவி. இவன் எங்கிருந்து வந்தவனென்று அறியோம்." 106. "இது. மிகவும் ஆச்சரியமான காரியமே. இக்காலத்தில் நீங்கள் வழிக் காட்டிகளாயிருக்க வேண்டியவர்கள். இந்த மனிதன் என் கண்களைத் திறந்தார். அப்படிப்பட்ட செயலை ஒருவன் புரிந்ததாக உலகம் உண்டானது முதல் கேள்விப்படவில்லையே. அப்படியிருந்தும் அவர் எங்கேயிருந்து வந்தவரென்று உங்களுக்குத் தெரியாதென்று கூறுகிறீர்களே.' ஓ, 'என்னே ! 107. ஏன்? அவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் மேல் சாய்ந்திருப்பதற்கு பதிலாக - தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்தனர். ஏசாயா, "குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, முடவன் மானைப் போல் குதிப்பான். வனாந்தரம் களிப்படையும்" (ஏசா.35:5, 6) என்று ஏற்கனவே முன்னுரைத்திருந்தான். ஆனால் பாருங்கள், அவர்கள் வார்த்தையின் மேல் சாய்ந்திராமல், தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து இருந்தனர். அவர்களுடைய சொந்த முறைமையை அவர்கள் வகுத்துக் கொண்டனர். 108. இப்பொழுது கவனியுங்கள், இன்றைய சபைகளும் அதையே செய்கின்றன. அவர்கள் தங்கள் ஸ்தாபன முறைமைகளில், சிறந்த அறிவு கொண்ட உன்னத வகுப்பினராக இருந்து. யாரும் அந்த நிலையை அடையாமல் அவர்களைச் சேரக் கூடாது என்று நினைக்கின்றனர். 109. என்னிடம் அப்படி இல்லை என்று சொல்லாதீர்கள். நான் அரிசோனா-விலுள்ள டூசானில் வசிக்கிறேன். அங்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடி புகுந்தேன். நான் சபைகளின் ஆலோசனை சங்கத்தை சந்தித்து, "நான் ஒரு சபையைத் தொடங்க இங்கு வரவில்லை. உங்களிடம் ஐக்கியம் கொள்ளவே வந்திருக்கிறேன். உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்" என்றேன். அவர்கள், "ஒரு சபையைத் தொடங்கவா இங்கு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். 110. நான், "இல்லை, ஐயா. நான் இங்கு வந்த காரணம்... சபை வேண்டுமானால், எனக்கு இந்தியானாவில் ஒன்று உள்ளது. ஒரு தரிசனத்தின் மூலம் கர்த்தர் என்னை இங்கு அனுப்பினதால், நான் வந்திருக்கிறேன். அவர் மறுபடியும் என்னை இங்கிருந்து கொண்டு போகாவிட்டால், நான் சிறிது காலம் இங்கு தங்கியிருப்பேன். நான் சபையைத் தொடங்க இங்கு வரவில்லை. சகோதரர்களாகிய உங்களுக்கு உதவி செய்யவே வந்திருக்கிறேன்” என்றேன். 111. அது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. இது வரைக்கும் நான் ஒரு இடத்துக்கும் அழைக்கப்படவில்லை. ஏன்? அதன் பிறகு உடனே அவர்கள் ஒன்று கூடி, என்னைத் தன் பிரசங்கப் பீடத்துக்கு அழைக்கும் எந்த போதகரும் சபைக்குப் புறம்பாக்கப்படுவார் என்று அறிக்கை விடுத்தனர். அவர்கள் என்ன செய்தனர்? தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து கொண்டனர். நிச்சயமாக அவர்கள் உன்னத அறிவு என்று அவர்கள் அழைக்கும் ஒன்றை உருவாக்கிக் கொள்கின்றனர். 112. உங்கள் பெயரை அவர்கள் புத்தகத்தில் பதிவு செய்தாலொழிய நீங்கள் இழக்கப்படுவீர்களாம். "ஓ, எதோ ஒரு உளறுவாயன் அப்படி சொல்லி இருப்பான்" என்று நீங்கள் கூறுவீர்கள். இல்லை, பெந்தெகொஸ்தே போதகர் ஒருவர் கூறினார். 113. ஜாக்-மூரும் நானும் டல்லாஸிலுள்ள டெக்ஸாஸில் உட்கார்ந்து கொண்டு இவர் தொலைபேசியில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அவர், "இந்த மனிதனின் பெயரை நான் புத்தகத்திலிருந்து எடுத்துவிடப்போகிறேன்" என்றார். நான், "ஏன்? என்று கேட்டேன். "உங்களுடன் ஐக்கியங்கொண்டதற்காக." "எடுத்துப் போடுங்கள்" என்றேன். "அப்படியானால் அவன் இழக்கப்படுவான்” என்றார். நான், "இழக்கப்படுவானா?" என்றேன். அவர், "ஆம், அவன் பெயர் புத்தகத்தில் இராவிட்டால்" என்றார். 114. நான், "நீர் மாகாணப் போதகராயிருந்து அதை நம்புகிறீர்களா?" என்றேன். அவர், "அது உண்மை" என்றார். 115. நான், “மிஸ்டர், தொலைபேசியை கீழே வைத்து விடுங்கள். நீர், நீர்... அது தேவனுடைய கிருபை அல்ல" என்றேன். பாருங்கள்? 116. "நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்துக்குள்ளாக ஞான ஸ்நானம் பண்ணப்பட்டு, அந்த சரீரத்தின் அங்கத்தினராயிருக்கிறோம்." (1 கொரி.12:13). நீங்கள் எந்த பிராண்டை' (brand) உங்கள் மேல் தரித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. நீங்கள் மறுபிறப்பின் மூலமாக மாத்திரமே கிறிஸ்தவராக முடியும். அது ஒரு வழி மாத்திரமே உங்களுக்கு உண்டு. ஒரு ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்வதனாலோ, கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதனாலோ, இதன் காரணமாக உணர்ச்சி வசப்படுவதனாலோ, இதை உச்சரிப்பதனாலோ, கல்வியினாலோ. வேத சாஸ்திர அறிவினாலோ நீங்கள் ஆகிவிட முடியாது. நீங்கள் மறுபடியும் பிறப்பதனால் மாத்திரமே கிறிஸ்தவராகின்றீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்க, தெரிந்து கொள்ளப் பட்டாலொழிய, நீங்கள் மறுபடியும் பிறக்க, முடியாது. என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்' (யோவான்.6 : 44, 37). ஆமென்.. “கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்.” 117. தங்களைப் பெரிதென்று அழைத்துக் கொள்ளும் இந்த வேதாகமப் பள்ளிகள், அவை கற்றுத் தருபவைகளின் மேல் சாய்ந்திருக்க வேண்டுமென்று கூறுகின்றன. வார்த்தை என்ன கூறினாலும், அவர்கள் அதற்கு தங்கள் சொந்த விளக்கத்தை அளித்து, அவர்கள் அதை நம்பி, அவர்களைச் சேர்ந்தவர்களும் அதை நம்பும்படி செய்து, "அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் என்றெல்லாம் கிடையாது, குணமாக்கும் வரங்கள் எதுவும்மில்லை. அது வேதாகம நாட்களுடன் முடிவு பெற்று விட்டது" என்கின்றனர். அவர்களே அதை நம்புகின்றனர். 118. நீங்கள் பொய்யை விசுவாசித்து ஆக்கினைத்தீர்ப்படையலாம் என்று வேதம் உரைக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், அது முற்றிலும் உண்மை. தேவனுடைய வார்த்தை என்ன கூறினபோதிலும், அவர்கள் தங்கள் சுய புத்தியின் மேல் சாய்ந்து, அதை விசுவாசித்து, அது உண்மையென்று நம்புகின்றனர். நீங்கள் ஒரு பொய்யை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் விசுவாசித்து, அது உங்களுக்கு முடிவில் சத்தியமாகி விடுகிறது. அது உண்மை. 119. அது சத்தியமா இல்லையாவென்று நாம் எப்படி அறிவது? தேவன் அது சத்தியமென்று நிரூபிக்கிறார். ஏனெனில் அது அவருடைய வார்த்தை, அவர் அதை உறுதிப்படுத்துகிறார். அதன் மூலம் அவரே அதை வியாக்கியானப் படுத்துகிறார். 120. ஆனால் அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள்? தங்கள் பண்பாடு, தங்கள் கல்வி, தங்கள் புத்தி, தங்கள் டாக்டர் பட்டம் இவைகளின் மூலம். அவர்கள் சில வேதாகமப் பள்ளிகளுக்கு சென்று இவைகளைக் கற்று வெளி வருகின்றனர். 121. ஆனால் பாருங்கள், நண்பர்களே, கவனியுங்கள். வேதாகமத்தில் எங்கேயும் நாம் புத்தியை உபயோகித்து அறிந்து கொள்ள வேண்டுமென்று கூறப்பட-வில்லை. நாம் அதை விசுவாசிக்க வேண்டுமென்றே கூறப்பட்டுள்ளோம். அதை எப்படி விசுவாசிப்பது? விசுவாசத்தின் மூலம். நீங்கள் அதை புத்தியினால் அறிந்து கொள்ள தலைப்பட்டால், அது விசுவாசத்தைப் போக்கி விடுகிறது. உங்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அதை எப்படியாவது விசுவாசியுங்கள். என்னால் தேவனை புத்தியினால் புரிந்து கொள்ள முடியுமானால், அவரை விசுவாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்த மனிதனும் அவரை புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னால் தேவனுடைய வார்த்தையை புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். அதை புரிந்து கொள்ள வேண்டுமென்று என்னிடம் கூறப்படவில்லை. 122. எனக்கு எந்த வேதாகமப் பள்ளிக்கும் சென்று, மனித அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டியதில்லை. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று வேதம் கூறுகிறது என்பதை மாத்திரம் நான் அறிந்திருக்கிறேன். அந்த அடிப்படையில் அவரை நான் எதிர் நோக்குகிறேன். இந்த நாளில் அவர் என்ன செய்வார் என்று வாக்களித்து உள்ளதை நான் அறிந்திருக்கிறேன். அவர் அதை செய்வார் என்று நான் எதிர் நோக்குகிறேன், அவர் அதை செய்கிறார். அது உண்மை. அவர் கிருபையை வாக்களித்தார். அதை நான் எதிர் நோக்கி பெற்றுக் கொண்டேன். அவர் சுகமளித்தலை வாக்களித்தார். அதை நான் விசுவாசித்து ஏற்றுக் கொண்ட போது, சுகத்தைப் பெற்றுக் கொண்டேன். 123. உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்னுடன் ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்வீர்களானால், தங்கள் சுயபுத்தியின் மேல் சாயாத வேதத்திலுள்ள சிலரை- அவர்கள் காலத்தின் புத்தி என்னவாயிருந்த போதிலும், தங்கள் சுயபுத்தியின் மேல் சாயாத சிலரைக் குறித்து- நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன். 124. உதாரணமாக நாம் நோவாவை எடுத்துக் கொள்வோம். விஞ்ஞான ஆராய்ச்சி அதிகம் வளர்ந்திருந்த காலத்தில் நோவா வாழ்ந்தான். நோவாவின் காலத்தில் அவர்கள் ஒருக்கால் கூர்நுனிக் கோபுரங்களைக் கட்டியிருப்பார்கள். அதை அவர்கள் இக்காலத்தில் கட்ட முடியவில்லை. அந்த பெரிய கற்களை உயரத் தூக்க நம்மிடம் இயந்திரம் கிடையாது. இன்றைக்கு அவர்களால் செய்ய முடியவில்லை. அக்காலத்தில் அவர்கள் ஒருவித இரசாயனத்தை சாயத்தில் போட்டு கலந்தனர். அந்த சாயம் தோய்த்த துணி இன்று வரை சாயம் போகாமல் உள்ளது. அவர்கள் சவத்தை கெடாமல் பாதுகாக்கும் தைலத்தை வைத்திருந்தனர். நம்மால் இன்று அப்படிப்பட்ட ஒரு தைலத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. நாம் 'அநேக கலைகளை நாம் இக்காலத்தில் இழந்துவிட்டோம். ஆனால் நோவா வாழ்ந்த காலம் அறிவு வளர்ந்த விஞ்ஞான காலமாய் இருந்தது. 125. இயேசு அந்த காலத்தைக் குறிப்பிட்டு, அவருடைய வருகைக்கு முன்பு அதே விதமான ஒரு காலம் திரும்ப வரும் என்று முன்னுரைத்தார். நோவாவின் காலத்தில் நடந்தது போல. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இல்லையா? (சபையோர் "ஆமென்' என்கின்றனர்-ஆசி). இயேசு அப்படி கூறினார் என்று விசுவாசிக்கிறீர்களா? "ஆமென்). அந்த காலத்தை இப்பொழுது நாம் அடைந்திருக்கிறோம் என்று விசுவாசிக்கிறீர்களா? ("ஆமென்). அது லூக்கா 17-ம் அதிகாரம் 29-ம் வசனம். 126. அவர் லூக்கா.17:30-ல் லோத்தின் நாட்களில் நடந்தது போல, கர்த்தருடைய தூதன்...' என்றார். 127. நாம் படிக்கும் அதே வேதாகமத்தை அவரும் படித்தார். அவர்... நீங்கள் வேதாகமத்துக்கு திரும்பிச் சென்று, ஜலப்பிரளயம் வருவதற்கு முன்பு நோவாவின் காலம் எப்படியிருந்ததென்று பாருங்கள். நீங்கள் வேதாகமத்து-க்குத் திரும்பிச் சென்று, உலகம் அழிவதற்கு முன்பு லோத்தின் நாட்கள் எப்படியிருந்ததென்று பாருங்கள். அப்பொழுது இயேசு எதைக் குறிப்பிடுகிறார் என்பதை அறிந்து கொள்வீர்கள். 128. நோவாவின் காலத்தில் அவர்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும், நோவா பேழைக்குள் பிரவேசித்து ஜலப்பிரளயம் அவர்களை வாரிக் கொண்டு போகும் மட்டும் அறியாதிருந்தார்கள். 129. லோத்தின் நாட்களில் உலகம் அழிக்கப்படுவதற்கு சற்று முன்பு... புறஜாதி உலகம் அக்கினிக்கு இரையாக்கப்படுவதற்கு முன்பு, சோதோமியர் ஆண் புணர்ச்சிக்காரராய், சீர்குலைந்த நிலையில் இருந்தனர். உலகத்தில் பாவம் அனைத்தும் இருந்தது. அது ஒரு பெரிய... அது ஒரு நவீன லாஸ்-ஏஞ்சலிஸ். அது நவீன லாஸ்-ஏஞ்சலிஸ் மாத்திரமல்ல, அமெரிக்க ஐக்கிய நாடுகளும் கூட. அது அமெரிக்க ஐக்கிய நாடுகள் மாத்திரமல்ல, முழு உலகமே. அது நிச்சயமாக சீர்குலைந்த நிலை-! மனிதன் தன் வாழ்க்கையில் கடைபிடித்த இயற்கையான பழக்கவழக்கங்கள் அனைத்தும் கைவிட்டு, அந்த வாழ்க்கையை மாற்றத்தக்கதான பொல்லாத ஆவியினால் பீடிக்கப்பட்டு இருந்தான். லோத்தின் நாட்களில் அது உண்மையான காட்சி... இல்லையென்றால், வேறென்னவென்று எனக்குத் தெரியவில்லை. நோவாவின் காலத்திலும் அவர்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும், இன்றுள்ளது போல் அன்று விவாகரத்து நீதிமன்றங்கள் மக்களால் நிறைந்து வழிந்தன. 130. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், உலகம் அழிக்கப்படுவதற்கு முன்பே ஆபிரகாம் பூமிக்கு அனுப்பப்பட்டு, குமாரனைக் குறித்த ஒரு வாக்குத்தத்தைப் பெற்றான். ஆபிரகாம், தேவனை அநேக கட்டங்களில் சந்தித்தான். சபை ஆனது தேவனை சந்திப்பதற்கு அது முன்னடையாளமாயுள்ளது. அழிவுக்கு முன்பாகவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பாகவும், தேவன் இறங்கி வந்து மாமிச சரீரத்தில் ஒரு மனிதனாக தம்மை வெளிப்படுத்தினார். மூன்று மனிதர்கள் லோத்தினிடம் சென்றனர். முதலில் அவர்கள் ஆபிரகாமிடம் சென்று அங்கு உட்கார்ந்தனர். ஆபிரகாமின் பெயர் ஆபிராமிலிருந்து ஆபிரகாம் என்பதற்கு மாற்றப்பட்டது. அவ்வாறே சாராயிலிருந்து சாராள். 131. இந்த மனிதன், ஏலோகிம், ஆபிரகாமுடன் பேசுவதற்காக இறங்கி வந்த போது, அவனிடம் என்ன கூறினார்? அவர், "உன் மனைவி சாராள் எங்கே?" என்று கேட்டார். அவன், "அவள் உமக்குப் பின்னாலுள்ள கூடாரத்தில் இருக்கிறாள்" என்றான். 132. அவர், 'உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்தில் திரும்ப வருவேன்" என்றார். அவருக்கு பின்னாலிருந்த கூடாரத்திலிருந்த சாராள் நகைத்தாள். அவர், “சாராள் ஏன் நகைத்தாள்? என்றார். பாருங்கள்? அவருடைய வார்த்தையை கேட்டு சிரித்ததற்காக அவர் சாராளுடைய உயிரைப் போக்கியிருக்கலாம். ஆனால் சாராள் ஆபிரகாமின் ஒரு பாகமாக இருந்ததனால் அவரால் அப்படி செய்ய முடியவில்லை. 133. லூக்கா 17-ம் அதிகாரம் 30ம் வசனத்தில், இயேசு, "லோத்தின் நாட்களில் நடந்தது போல, கடைசி காலத்தில் மனுஷகுமாரன்...' என்றார். 134. "மனுஷகுமாரன்" என்பது தீர்க்கதரிசி. யேகோவா, எசேக்கியலை “மனு புத்திரன்" அல்லது மனுஷகுமாரன் என்றழைத்தார். இயேசுவுக்கு மூன்று நாமங்கள் உண்டு: மனுஷகுமாரன், தேவ குமாரன், தாவீதின் குமாரன். அவர் தம்மை "மனுஷகுமாரன்' என்று அழைத்துக் கொண்ட காரணம் என்னவெனில், தேவனாகிய கர்த்தர் தாம் எழுப்புவதாக வாக்களித்த தீர்க்கதரிசி இவரே என்று ஜனங்கள் புரிநது கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 135. இப்பொழுது கவனியுங்கள், அவர் எதை வாக்களித்தார்? அந்த நேரத்தில், அக்கினி தோன்றுவதற்கு முன்னால், மனுஷகுமாரன் தம்மை மறுபடியுமாக வெளிப்படுத்துவார் என்று, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு ஆபிரகாம் கண்ட கடைசி அடையாளம் அதுவே. ஆபிரகாம் வாலிபனாக மாறினான், சாராள் வாலிப ஸ்திரீயாக மாறினாள். இப்பொழுது கவனியுங்கள், வேதம் அதை திட்டவட்டமாகக் கூறுகிறது. அதை நாம் எதிர்நோக்க வேண்டும். 136. நாம் உலகத்தை, இன்று சீர்கேடான நிலையில், அது போய்க் கொண்டு இருக்கிற போக்கில் காணும் போது, இது சரியென்று கூறிவிட்டு, மற்றது சரியென்று எப்படி கூறாமலிருக்க முடியும்? அப்படியானால் நீங்கள் சுய புத்தியின் மேல் சாய்ந்திருக்கிறீர்கள் என்றும் சோதோமின் வாசலில் அவர்களுடன் கூட இருந்த ஜீவாதிபதியின் புத்தியின் மேல் சாய்ந்து இருக்கவில்லையென்றும் புலனாகிறது. நாம் நம்முடைய சுயபுத்தியின் மேல் சாயாதபடி கவனமாயிருக்க வேண்டும். 137. நோவா தன் சுயபுத்தியின் மேல் சாயவில்லை. அது மகத்தான விஞ்ஞான காலம். இருப்பினும் அவன் காலத்தின் புத்தியின் மேல் அவன் சாய்ந்திருக்க-வில்லை. அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் சாய்ந்திருந்து, தேவனுடைய வல்லமையினால் அசைந்து, தன் வீட்டாரை இரட்சிக்க ஒரு பேழையை உண்டாக்கினான். அது சாதாரண அறிவுக்கு முற்றிலும் முரணாய் இருந்தது. வானத்தில் தண்ணீர் இல்லை, அதற்கு முன்பும் இருக்கவில்லை. ஆனால் அங்கு தண்ணீர் இருக்கும் என்று தேவன் கூறினால், அது கண்டிப்பாக இருக்கும் என்று அவன் அறிந்திருந்தான். எனவே அவன் தன் சுயபுத்தியின் மேல் சாயாமல், தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்து செயல்-பட்டான். தேவனுடைய ஆவி அவனை அசைத்தது, அவன் செயல்பட்டான். 138. ஆபிரகாம் மனித வாழ்க்கையைக் குறித்து தன் சுய புத்தியின் மேல் சாயவில்லை. அவன் தன் மனைவியை, அவளுக்கு 17-வயதுள்ள போதே விவாகம் செய்தான். இதோ அவனுக்கு 75-வயது, அவளுக்கு 65-வயது. அவள் அவனைக்காட்டிலும் பத்து வயது இளையவள். தேவன் சாராளின் மூலம் அவனுக்கு ஒரு குமாரனைக் கொடுப்பதாக வாக்களித்த போது, அவன் தன் சுயபுத்தியின் மேல் சாயவில்லை. அவன் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள விஞ்ஞான நிரூபணங்களை, தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்ட எவைகளையுமே, அவை இல்லாதது போல் அழைத்தான். அவன் தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான். அவன் தன் சரீரம் செத்துப் போனதையும் சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான். அவன் எதையுமே எண்ணாமல், தேவனுடைய வாக்குத் தத்தத்தின் மேல் சாய்ந்திருந்தான். அவன் தன் சுயபுத்தியின் மேல் சாய்ந்து இருக்கவில்லை, அவன் விவேகத்தின் மேல் சாய்ந்திருக்கவில்லை. 139. நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, நமக்கு நிறைய மருத்துவர்கள் இருப்பதனால், தேவன் வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவதில்லை" எனலாம். 140. வேதம், "நம்முடைய சிந்தனையை விட்டுவிட வேண்டும்" என்று கூறுகிறது. நாம் சிந்திப்பதில்லை. விசுவாசம் சிந்திப்பதில்லை. அது விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறது. கவனியுங்கள். 141. ஆபிரகாம் அவிசுவாசிக்காமல் விசுவாசித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைத்தான். அது எந்த சிந்தனைக்கும் முற்றிலும் விரோதமானது. அவன் சிந்திக்கவில்லை, அவன் விசுவாசித்தான். அந்த குழந்தை பிறக்கும் என்று சிந்தனை எதுவும் நிரூபிக்க முடியாது. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்று போய் 20-ஆண்டுகள் ஆகி விட்டன. அவனுடைய சரீரம் செத்துப் போனது. 25-ஆண்டுகள் கழித்து, அவனுக்கு 100-வயதான போது, அவன் அப்பொழுதும் எவ்வித சிந்தனையும் இன்றி தேவனை மகிமைப்படுத்திக் கொண்டிருந்தான். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார் என்று அவன் விசுவாசத்தினால் அறிந்து இருந்தான். அவன் தன் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருக்கவில்லை. 142. இஸ்ரவேல் புத்திரரை பார்வோன் கரங்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தேவன், மோசேயுடன் கூறின போது, அவன் தன் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்தால் என்னவாயிருக்கும்-? அவன் அக்கினி ஸ்தம்பத்தின் அருகே நின்று கொண்டிருந்தபோது, தேவன் அவனிடம், "நீ போ. நான் உன்னுடன் இருக்கிறேன்" என்று சொன்ன போது, அவன் சுயபுத்தியின் மேல் சாய்ந்து இருந்தால் என்ன நடந்திருக்கும்-? அவன் சிவந்த சமுத்திரத்தின் அருகே வந்த போது, எங்கும் தண்ணீராக இருந்து, தேவன் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்கு கொண்டு செல்வதாக வாக்களித்திருந்த போது, அவன் சுயபுத்தியின் மேல் சாய்ந்து, "நாம் எப்படி இதை கடந்து செல்லப் போகிறோம்? பாலம் கட்டக்கூட நமக்கு நேரமில்லை. பார்வோனின் சேனை நம்மை துரத்தி வருகின்றதே. இரு பக்கங்களிலும் மலைகள் வேறு. நமக்கு முன்னால் சிவந்த சமுத்திரம் உள்ளதே" என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும்? 143. மோசே தன் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்தால், அவன் கைகளை மேலே விரித்து, பார்வோனிடம் ஓடி அவன் கால்களில் விழுந்து, “பார்வோனே, என்னை மன்னித்துவிடு. நான் தவறு செய்துவிட்டேன்" என்று கூறியிருப்பான். 144. ஆனால் அவனோ தன் சுயபுத்தியின் மேல் சாயவில்லை. அவன் ஜெபம் பண்ணினான். தேவன் அவனுடன் முன் செல்லும்படி கூறினார். அப்பொழுது சமுத்திரம் பிளந்தது. அது எல்லா சிந்தனைக்கும் விரோதமானது. அவன் தன் சுயபுத்தியின் மேல் சாயவில்லை. 145. யோசுவா மற்ற 10 ஸ்தாபனங்களுடனும் எல்லையைக் கடந்து வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் கண்டு அவர்களுடன் திரும்பி வந்து, ஒரு நிமிடம் பொறுங்கள். அது உண்மை. நாம் அவர்களுக்கு முன்னால் வெட்டுக் கிளிகளைப் போல் தான் இருக்கிறோம். அவர்கள் இராட்சதர், அவர்களை நாம் எப்படி ஜெயிக்க முடியும்? நம்மிடத்தில் பட்டயங்கள் கூட கிடையாது. நாம் வழியில் பொறுக்கினவை மாத்திரமே உள்ளன. நாம் எப்படி போய் தேசத்தைக் கைப்பற்ற முடியும்? அது கூடாத காரியம். அவர்கள் 50-பேருக்கு ஒரு பேர் என்னும் வீதத்தில் நம்மைக் காட்டிலும் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள். நாமோ எகிப்திலிருந்து வெளியே வந்த ஆடு மேய்ப்பவர்களும் மண் பிசைபவர்களும் கொண்ட கூட்டமே. எப்படி முடியும்? நம்மிடம் கேடயம், மற்றெந்த போராயுதங்களும் இல்லை. நாம் எப்படி கைப்பற்ற முடியும்? என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? 146. அவர்கள் அவ்வாறு சிந்தித்திருந்தால், அவர்களால் அப்படி செய்ய முடியாது என்பதை அது நிரூபித்திருக்கும். ஆனால் யோசுவாவைப் போன்ற இராணுவ வீரன், அல்லது மோசே, தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருக்க முடியாது. அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருக்கவில்லை. ஏனெனில் தேவன், "அந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன். போய் அதை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்" என்றார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 147. உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதீர்கள். நீங்கள் இன்று வியாதிப்பட்டு, ஒருக்கால் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம், அல்லது புற்று நோய், இருதயக் கோளாறு போன்றவைகளினால் சாகும் தருவாயில் இருக்கலாம். நீங்கள் மரித்து விடுவீர்கள் என்று மருத்துவர் ஒருக்கால் கூறி இருக்கலாம். உங்கள் சுயபுத்தியின் மேல் நீங்கள் சாய்ந்தால் மரித்து விடுவீர்கள். உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதீர்கள். அப்படி நிச்சயம் செய்யாதீர்கள். 148. எரிகோவின் மதில்களைக் குறித்தென்ன? அதன் மேல் இரதங்களின் பந்தயம் நடத்தும் அளவுக்கு அவை பெரிய மதில்களாக இருந்தனவாம். தேவன், "நீங்கள் அங்கு சென்று இத்தனை தரம் அதை சுற்றி வந்து, எக்காளம் முழங்கி, நீங்கள் அனைவரும் ஆரவாரம் செய்யுங்கள். அப்பொழுது மதில்கள் இடிந்து விழும்" என்றார். மாம்ச சிந்தைக்கு அது முற்றிலும் மூடத்தனமான செயலாக காணப்பட்டிருக்கும். அந்த மதில்கள் எவ்வளவு அகலமுள்ளவை என்பதை யோசுவா அறிந்திருந்தான். ஏனெனில் அவன் இப்படிப்பட்ட அநேக மதில்களை எகிப்தில் கட்டியிருக்கிறான். இரதங்களின் பந்தயம் நடத்தும் அளவுக்கு அவை பலமுள்ளதாய் இருக்க வேண்டுமானால், அதைக் கட்ட எந்த சிமெண்டு உபயோகிக்கப்பட்டதென்று அவன் அறிந்திருந்தான், அதன் மேல் வீடுகளும் கூட கட்டப்பட்டிருந்தனவாம். அவனோ தன் சுயபுத்தியின் மேல் சாயவில்லை. தேவன் கூறினதை உண்மையென்று அவன் விசுவாசித்து அதற்கு கீழ்படிந்தான். அப்பொழுது அந்த மதில்கள் இடிந்து விழுந்தன. சுய புத்தியின் மேல் சாயாமல் இருத்தல். 149. நான் ஞாயிறன்று பிரசங்கித்தது போல், யோசுவா போர் புரிந்து கொண்டு இருந்த போது, சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கினது. எதிரிகள் முறியடிக்கப் பட்டனர். அன்றிரவு அவர்கள் மறுபடியும் கூட்டம் கூடி, மற்றொரு சேனையுடன் வந்து, அவனுடைய ஆட்கள் அநேகரைக் கொன்று போடுவார்கள். அவன், "எனக்கு பகல் வெளிச்சம் தேவை. இன்னும் சிறிது நேரத்துக்கு எனக்கு சூரிய வெளிச்சம் இருந்தாக வேண்டும். ஒரு நிமிடம் பொறுங்கள். பூமி சூரியனைச் சுற்ற வேண்டும் என்னும் ஒழுங்கை தேவன் நியமித்துள்ளார். இப்பொழுது பார்ப்போம், நான் சூரியனை நிற்கும்படிக்கு கட்டளையிட்டால்... பூமி சுற்றுவது நின்று போனால் அது தன் ஈர்ப்பு சக்தியை இழந்து விடும். நான் கீழே விழுவேன்' என்று சிந்தித்திருந்தால் என்னவாயிருக்கும்? 150. அவன் தன் சிந்தனைக்கு செவி கொடுக்கவில்லை. அவன் செய்த ஒரே ஒரு காரியம், "சூரியனே, நில். சந்திரனே, நீ இருக்கும் இடத்திலேயே இரு" என்று கட்டளையிடுவதே. அது அவனுக்கு கீழ்படிந்தது. அவன் தன் சுய புத்தியின் மேல் சாயாமல், 'அந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன். போய் கைப்பற்றுங்கள்" என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல் சாய்ந்து இருந்தான். 151. அவர் பரிசுத்த ஆவியைத் தருவதாக உங்களுக்கு வாக்களித்துள்ளார். அதை நீங்கள் இந்த கன்வென்ஷன் கூட்டத்தின் போதே பெற்றுக் கொள்ளலாம். அதை இப்பொழுதே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். 152. "எனக்கு களைப்பாயிருக்கிறது. நான் மாலை உணவு அதிகம் உண்டு விட்டேன். நான் பரிசுத்த ஆவி பெறுவதை ஜான் காண்பது எனக்குப் பிடிக்கவில்லை' என்பதன் மேல் சாயாதீர்கள். ஓ, தயவு செய்து! உங்கள் சுயபுத்தியின் மேல் நீங்கள் சாய்ந்திருக்கிறீர்கள். 153. "வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" 154. "நான் இறந்து விடுவேன் என்று மருத்துவர் கூறி விட்டார். அவர் என்னைப் பரிசோதித்து பார்த்துவிட்டு, எனக்கு புற்று நோய் உள்ளது, எனக்கு இது உள்ளது என்று கூறினார். நான் இறந்து போகத்தான் வேண்டும். உன் சுயபுத்தியின் மேல் சாயாதே. தேவன் உன் நோய்களை எல்லாம் குணமாக்கும் தேவனாகிய கர்த்தர், எனவே உன் சுயபுத்தியின் மேல், எந்த மனிதனின் புத்தியின் மேல் சாயாதே. தேவனுடைய புத்தியின் மேல் மாத்திரம் சாய்ந்திரு. 155. சிம்சோனைக் குறித்தென்ன? ஆயிரம் பெலிஸ்தியர் அவனை எதிர்த்து வந்த போது என்ன நடந்தது? அதோ சிறு உருவம் படைத்த, சுருண்ட தலை மயிருடைய, இவ்வளவு உயரமுள்ள குள்ளன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவனுக்கு. பட்டயம் பிடித்து பழக்கமில்லை. அது அவனுக்குத் தெரியாது. ஏனெனில் அவன் இராணுவ பயிற்சி பெறவில்லை. அவன் சுருண்ட தலை மயிருடைய பெண்மைத்தனம் கொண்ட ஒருவன், ஏழு சுருள்கள் தொங்கிக் கொண்டிருந்த, தாயின் பின்னால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவன். அவன் அங்கு நின்று கொண்டிருந்த போது, இதோ ஆயிரம் பெலிஸ்தியர் அவனுக்கு எதிராக வருகின்றனர். அவன் கையில் ஒன்றுமில்லை. அவன் கீழே பார்த்த போது, வெளுத்துப் போன கழுதையின் தாடை எலும்பு ஒன்றைக் கண்டான். அதைக் கையிலெடுத்தான். 156. அவன் "இப்பொழுது பார்க்கலாம். இதைக் கொண்டு என்னால் அதிகம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் தலைச்சீரா அணிந்துள்ளனர். இந்த பெலிஸ்தியர் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லோருமே ஈட்டியை வைத்து உள்ளனர், அவர்கள் மார்க்கவசம் அணிந்துள்ளனர். அவர்கள் தலைச்சீரா ஒவ்வொன்றும் பதினைந்து பவுண்டு எடையிருக்கும். அவர்கள் எல்லோருமே சிறந்த இராணுவ வீரர். உடையும் தன்மை கொண்ட இந்த கழுதை தாடை எலும்பினால் அவர்கள் தலைச்சீராவை அடித்தால், அது சுக்கு நூறாகி விடும். அவ்வளவு தான்" என்றா நினைத்தான்? 157. அவன் தன் சுயபுத்தியின் மேல் சாயவில்லை. கையில் கிடைத்ததை அவன் எடுத்து பெலிஸ்தியரை அடிக்கத் தொடங்கினான். அவர்கள் ஆயிரம் பேர்களை அவன் கொன்ற பின்பும், அந்த தாடை எலும்பு அவன் கையில் இருந்தது. ஆமென். 158. மனிதனின் வேதசாஸ்திரம் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அதன் மேல் சாயாதீர்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்னும் தேவனுடைய வார்த்தையின் மேல் சாய்ந்து இருங்கள். 159. தாவீது சிம்சோனின்... சவுலின் வேதசாஸ்திரத்துக்கு செவி கொடுத்து இருந்தால் என்ன நடந்திருக்கும்? கோலியாத் அங்கு ஜம்பமடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். எல்லோருமே பயந்தனர். சவுல் சேனையிலிருந்த எல்லோரை விட உயரமானவன். கோலியாத், "யாராவது ஒருவன் வந்து என்னோடு யுத்தம் பண்ணட்டும். எல்லோருமே சாக வேண்டிய அவசியம் இல்லை. நான் அவனைக் கொன்றால் நீங்கள் எல்லோரும் எங்களைச் சேவிக்க வேண்டும். அவன் என்னைக் கொன்றால், நாங்கள் உங்களைச் சேவிப்போம்" என்றான், ஏனெனில் ஜெயிக்க அவனுக்கு அதிகம் வாய்ப்பு இருந்தது. பிசாசு வேதாகமப் பள்ளியிலுள்ள அனைவருடனும் வரும் போது, அப்படித்தான் செய்ய விரும்புகிறான், பாருங்கள். 160. சிறு உருவம் படைத்த தாவீது ஆட்டுத் தோலை மேலே போர்த்துக் கொண்டு அங்கு நடந்து வருகிறான், சிவந்த மேனியுடையவன், தோள் தொங்கினவன், மெலிந்தவன், 100-அல்லது 110-பவுண்டு எடையிருக்கும். அவன், "உடன்படிக்கையை கைக்கொண்டு விருத்தசேதனம் பண்ணப்பட்ட இந்த ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு சவால் விடுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள் என்றா கூறுகிறீர்கள்?" என்றான். 161. சவுல், "இங்கே வா பையனே. உன் தைரியத்தை மெச்சுகிறேன். ஆனால் அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. அப்படிப்பட்ட ஒன்று இப்பொழுது இல்லை, பார். உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். எந்த ஐக்கியச் சீட்டை உன்னால் காண்பிக்க முடியும்? உன்னிடம் போராயுதம் எதுவுமில்லை. உன் கையில் உள்ள ஒரு கவணைத்தவிர வேறொன்றும் இல்லை. பார்? நீ பீஎச்-டி அல்லது எல்.எல்.டி போன்ற வேத சாஸ்திர பட்டங்களை பெற்று இருக்கவில்லை. நீ எப்படி இதை செய்யப் போகிறாய்? அவன் சிறந்த போர் வீரன். அவன் டி.டி, இரட்டை பீஎச்.டி, எல்.எல்..க்யூ போன்ற அநேக பட்டங்களை பெற்றிருக்கிறான். நீ யார்? ஒரு சாதாரண ஆடு மேய்ப்பவன்” என்றான். 162. அதற்கு தாவீது; "உம்மிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். என்ன தெரியுமா? என் தகப்பனின் ஆடுகளை நான் மேய்த்துக் கொண்டிருந்த போது, ஒரு சிங்கம் வந்து ஒரு ஆட்டுக்குட்டியை கவ்வி ஓடினது. நான் என் கவணை எடுத்துக் கொண்டு அதற்கு பின்னால் ஓடிச் சென்று, அதை கீழே வீழ்த்தி, ஆட்டுக்குட்டியை அதன் வாயிலிருந்து மீட்டேன். அது எழுந்து என்னைத் தாக்க வந்த போது, நான் கத்தியை எடுத்து அதைக் கொன்று போட்டேன். நான் திரும்பிச் சென்றேன். ஒரு கரடி அந்த ஆட்டைத் துரத்தி வந்து, அதைக் கவ்வி ஓடினது. அதையும் நான் கொன்று போட்டேன். அந்த தேவன். என், பீ.எச்.டி அல்ல, என் சுயபுத்தி அல்ல. நான் எப்படி இதை செய்கிறேன் என்று என்னால் விவரிக்க இயலாது. அது எப்படி நடக்கிறதென்று எனக்கே தெரியவில்லை. ஆனால் கரடியின் கைக்கும் சிங்கத்தின் கைக்கும் என்னைத் தப்புவித்த தேவன், ஆமென். விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியனின் கைக்கு என்னைத் தப்புவிக்க மாட்டாரோ?" என்றான். 163. பேராயர் சவுல். பையனே, உனக்கு அழைப்பு இருக்கிறதென்று நான் நினைக்கிறேன். நீ இந்த பக்கம் வந்து விட்டால், எப்படி கத்தி சண்டை போடுவது என்று சொல்லித் தருவேன். நான் டாக்டர் பட்டம் பெற்றவன். எனவே என் மார்க்கவசத்தைப் போட்டுக் கொள். போர் உடைகளால் உன்னை உடுத்துவிக்கப் போகிறேன்" என்றான். தாவீது அங்கு நின்று கொண்டிருந்தான். அவர்கள் அவனுக்கு பீஎச்.டி, எல்.எல்.டி எல்லாம் அளித்தார்கள். பாவம் பையனுக்கு அசையக்கூட முடியவில்லை. அதை உடுக்க அவனுக்குத் தெரியவில்லை. 164. அவன், “இந்த உடைகளைப் போட்டு எனக்கு பழக்கமில்லை. மத சம்பந்தமான இந்த உடைகள் எனக்குப் பொருந்தவில்லை. இதை எடுத்து விடுங்கள். தேவனுடைய உதவியைக் கொண்டு நான் செல்லட்டும்' என்றான். அது தேவனுடைய வல்லமையின் பேரில் அவன் கொண்டிருந்த விசுவாசம். அவன் சுயபுத்தியின் மேல் சாயவில்லை. வேறு யாரோ ஒருவர் சொன்னதன் மேல் அவன் சாயவில்லை. அவன் விசுவாசத்தின் மேல் சாய்ந்திருந்தான். கரடியின் கைக்கு அவனைத் தப்புவித்த தேவன், இந்த பெலிஸ்தியனிடமிருந்து அவனை இன்னும் எவ்வளவு அதிகமாக காப்பார் என்று அவன் அறிந்து இருந்தான். 165. உங்களைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பும் அளவுக்கு தேவன் உங்கள் மேல் அன்பு கொண்டிருக்கும் போது, நாடு முழுவதிலும் உள்ள முதுகெலும்பில்லாத கோழைகளுக்கு என்ன நேர்ந்தது? அவர் வாக்களித்துள்ளபடி, உங்கள் வியாதியினின்று உங்களை எவ்வளவு அதிகமாக மீட்பார்? தேவனுடைய வார்த்தை அவ்வாறு உரைக்கிறது. அவர் அதை நிறைவேற்றுவார், நிச்சயமாக. அவர் அவனை பெலிஸ்தியனின் கைக்கு தப்புவித்து இரட்சித்தார். 166. ஓ, தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரும் அவரவர் காலங்களில் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவர்கள் ஆசாரியர்கள் இடத்திலும் பிரதான ஆசாரியர்கள் இடத்திலும் நடந்து சென்று, அவர்களை “வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்' என்றும் மற்ற பெயர்களைக் கொண்டும் அழைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அவர்களுக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் நவீன தீர்க்கதரிசிகள் போல் அவர்களுடன் ஒத்துப் போய், மெல்லிய வஸ்திரம் தரித்து, அரசர் மாளிகையில் இருந்திருப்பார்கள். 167. யோவான் ஸ்நானன் தன் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்தால் என்னவாய் இருக்கும்? ஆனால் அவன் நேராக அங்கு நடந்து சென்றான். 168. அவர்கள், யோவானே, ஒரு நிமிடம் பொறு. விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறித்து பிரசங்கம் செய்யாதே' என்றனர். 169. அவன் நேராக ஏரோதின் சிங்காசனத்துக்கு நடந்து சென்று, "நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல" என்றான். ஆம், ஐயா! "அது யார் தெரியுமா? அவன் ஒரு தீர்க்கதரிசி என்றார்கள். "அவன் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை" என்றான் ஏரோது. யோவான் சுயபுத்தியின் மேல் சாயவில்லை. 170. அவர்கள் யோவானிடம், "பார், உனக்கு ஒன்றும் அதிகம் இல்லை. நீ வனாந்தரத்தில் இருக்கிறாய். இப்படியெல்லாம் நீ நடந்து கொண்டால் சங்கம் உன்னை வரவேற்காது" என்று கூறியிருப்பார்கள். அவன் எந்த சங்கத்தைக் குறித்தும் கவலைப்படவேயில்லை. அவன் சுயபுத்தியின் மேல் சாயாமல், தேவனுடைய புத்தியின் மேல் சாய்ந்திருந்தான். நிச்சயமாக. 171. சுயபுத்தியின் மேல் சாய்ந்திருந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் யூதாஸ் காரியோத்து. ஓ, அவன்... அவன் எப்படி அவ்வாறு செய்தான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏவாள் ஆதியில் செய்தது போல், இவன் கிறிஸ்துவுடன் முகமுகமாய் நடந்தான். அவன் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டான். ஏவாள் சாயங்காலத்தில் குளிர்ச்சியான வேளையில் ஏதேன் தோட்டத்தில் கிறிஸ்துவை முகமகமாய் கண்டது போல, யூதாஸும் சாயங்காலத்தில் குளிர்ச்சியான வேளையில் கெத்சமனே தோட்டத்திலும் மற்றவிடங்களிலும் அதே கிறிஸ்துவை முகம் முகமாய் கண்டான். அவர் போதிப்பதையும், வார்த்தையினால் தம்மை நிரூபித்து. எழும்புவார் என்று மோசே முன்னுரைத்த தீர்க்கதரிசி அவரே என்று அவர் உறுதிப்படுத்துவதையும் அவன் கண்டான். அவர் வேதத்திலிருந்து, தாம் யார் என்பதை காண்பித்தார். இவைகளையெல்லாம் யூதாஸ் கண்ட பிறகும் தன் சுயபுத்தியின் மேல் சாய்ந்தான். 172. அவன் எவ்வாறு அப்படி செய்யலாம்? முதலாவதாக, அவனுக்குள் ஒன்றுமே இருக்கவில்லை. அவன் ஜீவனுள்ள வித்தாக இருக்கவில்லை. அவன் கேட்டின் மகன். அவன் கேட்டிலிருந்து பிறந்து கேட்டுக்கு திரும்பிச் சென்றான் என்று நாம் காண்கிறோம். அவன் இவ்விதமான கருத்தைக் கொண்டவனாக இருந்திருப்பான். அவன் நினைத்திருப்பான் இயேசு... அவன் அவர் பேரில் அவ்வளவு மரியாதை வைத்திருந்தான். அவன், அவரை 30- வெள்ளிக்காசுக்கு விற்று விடுவேன். அப்பொழுது என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கும். அதைக் கொண்டு நான் எதையாகிலும் செய்யலாம். அவர் தம்மை விடுவித்துக் கொள்வார்" என்று எண்ணியிருப்பான். பாருங்கள். அந்த இடத்தை எடுத்துக் கொள்ள அவன் எழுப்பப்பட்டிருக்கிறான் என்பதை அவன் வேத பூர்வமாக அறியாதவனாயிருந்தான். 173. இன்றைய ஜனங்களும் அவர்கள் எந்நிலையில் உள்ளனர் என்பதை அறியாமலிருக்கின்றனர். இந்த லவோதிக்கேயா சபை கிறிஸ்துவை வெளியே தள்ளி விட்டது. அது அந்த நிலையில் இருக்க நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர் கதவைத் தட்டி உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார் (சகோ. பிரன்ஹாம் 5-முறை பிரசங்க பீடத்தைத்தட்டுகிறார்-ஆசி). அவருக்கு எங்கும் ஒத்துழைப்பு இல்லை. அவர் இந்நாளில், அவர் ஒவ்வொரு காலத்திலும் செய்து வந்தது போல, தமது வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர்களோ அதை விட்டு விலகிச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருக்கின்றனர். அவ்வளவுதான். 174. யூதாஸ் இப்படியும் யோசித்திருக்கக் கூடும். அவன் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டால், அக்காலத்திலிருந்த மகத்தான ஸ்தாப-னங்களுடன்- பரிசேயர்களுடனும் சதுசேயர்களுடனும்- ஐக்கியங் கொள்ளலாம் என்று யோசித்திருப்பான். அவன், “சற்று பொறுங்கள். அவர் தம்மை காத்துக் கொள்வார். பெரிய போராட்டங்களில் அவரை நான் கண்டிருக்கிறேன். அவரால் தம்மைக் காத்துக்கொள்ள முடியுமென்று எனக்குத் தெரியும். ஆகவே ஓய்வு ஊதியம் போல் கொஞ்சம் பணம் உண்டாக்கிக் கொள்ளலாம். அது மாத்திரமல்ல, அவரைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் இந்த சபைகளின் செல்வாக்கையும் சிறிது பெறலாம்" என்று நினைத்திருப்பான். பாருங்கள், தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுதல் என்பதன் மேல் அவன் சாயாமல், தன் சுய புத்தியின் மேல் சாய்ந்தான். அவன் என்ன செய்வான் என்று வேதம் கூறினதோ, அதை அவன் இயேசுவுக்கு செய்தான். 175. இன்றைய சபை உலகமும் இந்தக் கடைசி நாட்களில், அவர்கள் என்ன செய்வார்களென்று வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் கூறியுள்ளபடியே, கிறிஸ்துவை புறம்பாக்கி விட்டார்கள். “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்," (2தீமோ.3:5). பாருங்கள்? அது உண்மை. இப்பொழுது. ஓ என்னே, அது எதை விளைவித்தது? தேவனுடைய வார்த்தையை சீர்குலையப் பண்ணும் ஒவ்வொருவருக்கும் அது மரணத்தை விளைவிக்கிறது. அவர்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்துள்ளனர். இப்பொழுதும் கூட அவர்கள், முப்பது வெள்ளிக் காசுக்கல்ல, ஒரு பெரிய உத்தியோகத்துக் காக அல்லது வேதாகமப் பள்ளி அனுப்புவதற்காக விற்றுப் போடுகின்றனர். அது முப்பது வெள்ளிக்காசு விலைமதிப்பும் இராது. இருப்பினும் அவர்கள் அதை விற்றுப் போடுகின்றனர். அவர்கள் அப்படிப்பட்ட ஒன்றுக்காக தேவனை அறிகிற அறிவை விற்றுப் போடுகின்றனர். 176. அதிகம் படித்திருந்த பரி.பவுலைக் காட்டிலும் இவர்கள் எவ்வளவு வித்தியாசம் வாய்ந்தவர்கள்! பெருமையடித்துக் கொள்ள அவன் அறிவு அனைத்தும் பெற்றிருந்தான். ஆனால் அவன், "என் அறிவு அத்தனையும் குப்பை என்று எண்ணுகிறேன். ஒரு நாள் நான் தமஸ்குவுக்குப் போகும் வழியில் அக்கினி ஸ்தம்பத்தைச் சந்தித்தேன். நான் உங்களிடம் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனிப்போடு வரவில்லை. அப்படி வந்திருந்தால் நீங்கள் மனுஷ ஞானத்தின் மேல் உங்கள் நம்பிக்கையை வைத்திருப்பீர்கள். ஆகவே நான் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் கிரியைகளோடும் வருகிறேன். அப்பொழுது நீங்கள் தேவனுடைய வார்த்தையின் மேல் சாய்ந்திருப்பீர்கள்' என்றான். ஆமென். அவன் நாங்கள் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன் என்றான். கலாத்தியர்.1:8. அது உண்மை. இல்லை, ஐயா! அவன் ஒரு போதும் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருக்கவில்லை. 177. கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீ நடத்தை கெட்டவள். சபைகள் அவளைப் புறம்பாக்கின. ஆனால் அவள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து இருக்கவில்லை. அவள் செய்த பாவங்களைக் கூறின அந்த ஒருவரை அவள் கிணற்றண்டையில் சந்தித்த போது, அவள் ஊருக்குள்ளே ஓடினாள். ஒழுக்கங் கெட்ட ஸ்திரீ அப்படி ஊருக்குள்ளே ஓடிப்போய் காரியங்களை அறிவிப்பது சட்ட விரோதமானது. ஆனால் அவள் இயேசுவை சந்தித்த போது, அக்காலத்து ஜனங்களின் புத்தியின் மேல் அவள் சாயவில்லை. அவள் சென்று, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்கு சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியாவல்லவா?" என்றாள், அவள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து இருக்கவில்லை. இல்லவே இல்லை. 178. கன்னி-மரியாளை காபிரியேல் தூதன் சந்தித்து, புருஷனை அறியாமலேயே அவளுக்கு குழந்தை பிறக்கப் போவதாக கூறினான். வ்யூ! இதற்கு முன்பு அப்படியொன்று நடந்ததில்லை. அவள் சுயபுத்தியின் மேல் சாயவில்லை, அவள், "இதோ நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள். அவள், "அது எப்படி முடியும்? அது எப்பொழுது நடக்கும்?" என்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை. 179 தேவ தூதன், "பரிசுத்த ஆவி உன் மேல் நிழலிடும். உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தம் உள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்" என்றான். 180. அவள், “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை" என்றாள். அவள் சிந்தித்து பார்த்து, அது கூடாத காரியம் என்று கூறவில்லை. அவள், “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை” என்று மாத்திரம் கூறினாள். அது உண்மை. கவனியுங்கள். 181. பெரும்பாடுள்ள ஸ்திரீயிடம் "நம்பிக்கை எதுவுமில்லை" என்று கூறி மருத்துவர் கைவிட்டார். அவள் தன் வாழ்நாள் முழுவதும் வைத்தியர்களிடம் செலவழித்தும் அவர்களால் ஒரு உபயோகமும் இல்லை. அவள் அதன் மேல் சாயவில்லை. இயேசு...அவள் திரளான ஜனக்கூட்டத்தின் வழியே கடந்து சென்று, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத்தொட்டால் நான் சொஸ்தம் ஆவேன்' என்றாள். 182. 'இப்பொழுது பொறுங்கள், மருத்துவர், 'நீ குணமாக முடியாது' என்று கூறிவிட்டார். அவளுக்கு அநேக ஆண்டுகளாக பெரும்பாடு இருந்தது. அவள் பலவீனமாகிக் கொண்டே சென்றாள். மருத்துவர்கள் அவளைக் கைவிட்டனர். அவர்களுக்கு அவ்வளவு தான் தெரியும். 183. ஆனால் அவள் விசுவாசத்தினால் அதை கூறினாள்! அப்படி செய்ய வேண்டுமென்று வேதம் கூறவில்லை. அவள், 'அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் நான் சொஸ்தமாவேன்" என்றாள். அவள் மெல்ல நழுவி, அவரைத் தொட்டு விட்டு, திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டாள். 184. இயேசு திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்? என்றார். அவளைக் கண்டு பிடிக்கும் வரைக்கும் அவர் சுற்று முற்றும் பார்த்தார். அவளுடைய பெரும்பாடைக் குறித்து அவளிடம் கூறினார். 185. அப்பொழுது அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். அவளால் அதை நிரூபிக்க முடியவில்லை, ஆனால் பெரும்பாடு நின்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். அவள், "மருத்துவர் கைவிட்ட பிறகு, வேறெதாகிலும் அவளுக்கு எப்படி உதவி செய்ய முடியும்? என்று சிந்திக்கவேயில்லை. அவள் சிந்தனைக்கு இடங்கொடாமல், விசுவாசத்துக்கு சென்றாள். 186. "நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய (தொடப்படக் கூடிய) பிரதான ஆசாரியராய் அவர், இருக்கிறார்" என்று வேதம் கூறுகிறது (எபி.4:15). அது சரியா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) நீங்கள் சிந்தனைக்கு இடங்கொடுத்து, ஓ, அதுவா" என்று சொல்லாதீர்கள். அவர், 'இன்று அவர் அப்படி இருக்கிறார். இப்பொழுது அவர் - நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார். 187. நான் பாப்டிஸ்டு போதகராயிருந்த போது கர்த்தருடைய தூதன் என்னைச் சந்தித்து, இப்பொழுது நான் செய்து வருவதை செய்யும்படிக் கட்டளை இட்டதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அப்பொழுது என் தலைமை போதகர், “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. உனக்கு தீக்கனவு (nightman) உண்டாயிருக்கும்" என்றார். நான், "என் ஐக்கியச் சீட்டை இப்பொழுதே எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன். 188. 'உனக்கு ஆரம்பப் பள்ளி கல்வி கிடையாது. நீ எப்படி உலகம் பூராவும் சென்று பிரசங்கிக்கப் போகிறாய்? உனக்கு இலக்கண ரீதியாக பேசக்கூடத் தெரியாது. நீ எப்படி ராஜாக்களுக்கும் அதிபதிகளுக்கும் ஜெபிக்கப் போகிறாய்? என்று கேட்டார். 189. என் இலக்கணத்தின் மேல் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. என் திறமையின் மேல் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நான் கட்டளை பெற்றேன். அல்லேலூயா! நான் சிந்திக்கத் தலைபடவில்லை. நான் சிந்தனைக்கு செவி கொடுத்திருந்தால், ஆயிரக்கணக்கானவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே வியாதியினால் மரித்துப் போயிருப்பார்கள். அவர் சொன்ன விதமாகவே உலகம் பூராவும் ஒரு செய்தியைக்கொண்டு சென்றேன். 190. நான் தேவனுடைய கிருபையினால் மறுபடியும் செல்கிறேன். என் சுயபுத்தியினால் அல்ல, ஆனால் கட்டளை பெற்று. அல்லேலூயா! நான் சுயபுத்தியின் மேல் சாயவில்லை... நீங்கள் “உங்களுக்கு 55-வயதாகி விட்டதே" எனலாம். எனக்கு 95-வயதானாலும் பாதகமில்லை. அவர் ஆபிரகாமுடன் இருந்த அதே தேவனாக இன்றும் இருக்கிறார். ஆம், ஐயா. உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதீர்கள். 191. அடையாளம் புறப்பட்டுச் சென்று, சத்தமும் அதைப் பின் தொடர்ந்து சென்ற பிறகு, உபதேசத்தின் காரணமாக சபைகள் என்னை வெளியே தள்ளி கதவுகளை மூடின. யாருக்கும் என் முன்னால் நின்று அது சரியா தவறா என்று கூற துணிச்சல் இல்லை. அவர்கள் எவருக்கும் நான் சவால் விடுகிறேன். உ, ஊ. நான் அறிவாளி என்று காண்பித்துக் கொள்ள வேண்டும் என்றல்ல. ஆனால் நான் எங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து இருக்கிறேன். அது உண்மை. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஒவ்வொரு கதவையும் மூடி, "இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்?" என்றனர். 192. அன்றொரு நாள் நான் மலையின் மேல் நின்று கொண்டிருந்தேன். நான், 'ஆண்டவரே, எனக்குத் தெரிந்த வரையில், நாடு முழுவதிலும் ஒரே ஒரு கதவு மாத்திரம் எனக்குத் திறந்துள்ளது. அது தான் அரிசோனாவிலுள்ள பீனிக்ஸ்" என்றேன். நான் மலையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் பேசுவது போல் அவ்வளவு தெளிவாக, "அதைப் பற்றி உனக்கு என்ன? என்னைப்பின்பற்றி வா" என்னும் சத்தத்தை கேட்டேன். என் சுயபுத்தி இனி ஒரு போதும் கிடையாது. அவருடைய வாக்குத்தத்தின் மேல் சாய்ந்து இருப்பேன். 193. ஓ, நண்பனே, சிந்தனைகளின் மேல் சாயாதே. நீ எட்டி பெர்ரோனெட்டுடன் சேர்ந்து கொண்டு இப்படி உரக்க சத்தமிடு: இயேசுவின் நாமத்தின் வல்லமையை எல்லோரும் வாழ்த்துங்கள் தேவதூதர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து ராஜ கிரீடத்தைக் கொண்டு வந்து அவரை எல்லோருக்கும் கர்த்தராக அவர்கள் முடி சூட்டுவார்களாக! 194. அது உண்மை. உன் சிந்தனையின் மேல், அல்லது வேறு யாருடைய சிந்தனையின் மேலும் சாயாதே. விசுவாசத்தினால் தேவனுடைய வாக்குத் தத்தை ஏற்றுக்கொள். அப்படி செய்வாயா? மற்றவர்கள் அப்படி செய்கின்றார்-கள் அல்லது அவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதனால் அல்ல. உன்னைக் குறித்தென்ன? அந்த காலத்தில் தம்மை வெளிப்படுத்தினது போல, இந்த காலத்திலும், தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்து என்னப் படுகிற இயேசுவைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் ஆமென்! என்கின்றனர் - ஆசி). நாம் ஜெபம் செய்வோம்... 195. கர்த்தராகிய இயேசுவே, ராஜாதி ராஜாவே, கர்த்தாதி கர்த்தாவே, தேவாதி தேவனே, சகல அதிபதிகளுக்கும் தேவனே, முந்தினவரும் பிந்தினவருமா-னவரே, அல்பா ஓமெகாவே, ஆதியும் அந்தமுமானவரே. பிரகாசமான விடி வெள்ளி நட்சத்திரமே, சாரோனின் ரோஜாவே, பள்ளத்தாக்கின் லீலிப் புஷ்பமே, தாவீதின் வேரும் சந்ததியுமானவரே, நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராயிருக்கிற தேவனாகிய கர்த்தாவே, வாரும். 196. இந்த திரளான ஜனங்களை ஆசீர்வதியும், கர்த்தாவே. இந்த... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) நாளை தொடங்க ஆயத்தமாயுள்ளது. இங்கு ஒரு சிறு கூட்டம் நடத்தினோம், அதில் நீர் எங்களை ஆசீர்வதித்தீர். உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தித் தந்தீர். தேவனே, எங்களுக்கு உம்மை தொடர்ந்து வெளிப்படுத்தித் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். இப்பொழுது எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் தேவையுள்ள ஜனங்கள். 197. கர்த்தாவே, ஜனங்களைக் கடிந்து கொள்ள எனக்குப் பிரியமில்லையென்று நீர் அறிந்திருக்கிறீர். ஆனால் இந்த பரிசுத்தமான கொழுந்துவிட்டு எரிதலை எப்படி அடக்க முடியும்? கர்த்தாவே, அப்படி செய்ய எனக்குப் பிரியமில்லை. என் வாழ்க்கையை, என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர். அதை நான் செய்தே ஆக வேண்டும். தேவனே, அதை செய்ய எனக்கு உதவி செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன். எனக்கு கிருபையைத் தாரும். நான் சுயபுத்தியின் மேல் சாயாமல், உமது வாக்குத்தத்தத்தின் மேல் மாத்திரம் சாய்ந்திருக்கும்படி செய்வீராக. இயேசுவின் நாமத்தில். ஆமென். 198. நீங்கள் ஒவ்வொருவரும் சில நிமிடங்கள் பயபக்தியாயிருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த திரளான ஜனக்கூட்டத்தின் மத்தியில், வியாதிப் பட்ட அநேகர் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. எத்தனை பேர் “வியாதியாயும் ஊனமாயும் இருக்கிறீர்கள்? இப்பொழுது உங்கள் கைகளையுயர்த்தி எனக்கு தேவன் தேவை” என்று சொல்லுங்கள். 199. உங்களில் அநேகரை எனக்குத் தெரியாது. இங்கு உட்கார்ந்து கொண்டு இருக்கும் மூன்று பையன்களை எனக்குத் தெரியும். இங்கு அமர்ந்திருக்கும் திரு. டோவையும் அவருடைய மனைவியையும் எனக்குத் தெரியும். இது சகோதரி மூர் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. அது சகோதரி மூர் என்பது சரியா? மற்றபடி வேறு யாரும் தெரிந்தவர்கள் இல்லை. மேடையின் மேல் சகோ.மைக் இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில், அத்தனை பேர் மாத்திரமே எனக்குத் தெரியும். 200. ஆனால் சோதோமில் தம்மை உறுதிப்படுத்தின அதே விதமாக இந்தக் காலத்திலும் உறுதிப்படுவதாக வாக்களித்துள்ள பரலோகப் பிதா உங்களை அறிந்திருக்கிறார். அவர் அவ்விதம் வாக்களித்துள்ளாரா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் -ஆசி). அவர் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார்! அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? “ஆமென்”). 201. நீங்கள் ஜெபம் செய்து விசுவாசித்தால்! “அவரைப் பிரதான ஆசாரியராக நான் எப்படி தொட முடியும்?” என்று சிந்திக்காதீர்கள். 202. “அவர் இப்பொழுது பிரதான ஆசாரியராயிருக்கிறார். அவர் மெல்கிசே-தேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் பிரதான ஆசாரியராய் இருக்கிறார்" என்று வேதம் புதிய ஏற்பாட்டில் கூறுகிறது. அவரைத் தவிர வேறு பிரதான ஆசாரியர் இல்லை. மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவைத் தவிர தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் வேறெவருமில்லை. அது உண்மை. அவர் ஒருவர் மாத்திரமே இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 203. அவர் அதே பிரதான ஆசாரியராக இருந்து, "நம்முடைய பலவீனங்களைக் குறித்து அவரை நாம் தொட முடியும்" என்று வேதம் கூறுமானால், பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டது போல உங்கள் விசுவாசம் அவரை இன்று தொட முடியும். அவர் ஆபிரகாமின் கர்வாலி மரத்தின் கீழ் மாமிச சரீரத்தில் எப்படி நடந்து கொண்டாரோ, அப்படியே இன்றிரவும் மாமிச சரீரத்தில் அவர் நடந்து கொள்ள முடியும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் "ஆமென்” என்கின்றனர்-ஆசி). அவர் அப்படி வாக்களித்துள்ளார். தேவையுள்ள எவரும் இப்பொழுது ஜெபித்துக் கொண்டிருங்கள். நான், நான்..... 204. நான் கூறினது போன்று, வரம் என்பது ஒரு கத்தியை எடுத்து. உங்கள் விருப்பப்படி இதிலிருந்து அல்லது அதிலிருந்து அறுத்து எடுத்துக் கொள்வது அல்ல. அது தேவனுடைய வரமல்ல. பாருங்கள் இல்லை. 205. தேவனுடைய வரம் என்பது நீங்கள் ஏதாவதொரு வழியில், சாதாரண வழியிலிருந்து மாறிச் செல்லுதல். வரங்களும் அழைப்புகளும் தேவனுடைய முன் குறித்தலினால் அருளப்படுகின்றன. வரங்களும் அழைப்புகளும் மனந் திரும்புதல் இல்லாமல் கூட அளிக்கப்படுகின்றன. நீங்கள் அதனுடன் பிறக்கின்றீர்கள். அது ஒரு சிறு பல் சக்கரத்தை (gear) கொண்டு, உங்களை மேலே இழுத்துக் கொள்ளுதல், ஆனால் நீங்கள் மிதியை மிதித்து ஓட்ட முடியாது. பாருங்கள்? தேவனே அதை இயக்க வேண்டும். நீங்கள் வழியை விட்டு விலகி நிற்க வேண்டும். 206. உங்கள் விசவாசம் அதை இயக்க முடியும், என் விசுவாசம் அல்ல, உங்களுடைய விசுவாசம். என் விசுவாசம் அதை சாதாரண வழியிலிருந்து மாற்றிக் கொண்டு செல்லும். இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 207. உங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து, “பாருங்கள், சகோதரனே, நான் மிகவும் மோசமான நிலையில் உள்ளேன். என்னை "உங்களுக்குத் தெரியாது. நான் இந்த சக்கர நாற்காலியில் எத்தனையோ...” என்று கூறாதீர்கள். 208. நீங்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர் பூமியில் மாமிசசரீரத்தில் இருந்த போது என்ன செய்தாரோ, அதையே இப்பொழுது செய்கிறாரா இல்லையாவென்று பாருங்கள். நாம் ஒருமித்து அவரை விசுவாசித்தால், அவர் உங்கள் சரீரத்திலும் என் சரீரத்திலும் அதை செய்வார். ஏனெனில் அவர் அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார். 209. ஓ, அது மனோதத்துவத்தினால் அறிந்து கூறுவது என்று மற்றவர் கூறுவதன் மேல் சாயாதீர்கள். அப்படித்தான் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இயேசுவையும் அப்படித்தான் குறி சொல்வார் என்றழைத்தார்கள். ஆனால் அவர் தேவனுடைய குமாரன். ஏனெனில் அவர் தேவனுடைய வார்த்தை வாக்களித்த விதமாகவே வந்தார்: 210. நான் கூறினபடி, நாங்கள் உங்களிடம் வந்து உங்கள் மேல் கைகளை வைக்கவேண்டிய அவசியமில்லை. நேற்றிரவு நாங்கள் கைகளை வைத்தோம். ஆனால் உங்களுக்கு இருக்க வேண்டிய ஒன்றே ஒன்று விசுவாசமே. அதன் பிறகு அதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். விசுவாசத்தினால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறொன்றும்..... "அது எப்படி முடியும்?" என்று கேட்காதீர்கள். 211. அது எப்படி முடியும் என்று நான் உங்களிடம் கூறினால், அது ஒருக்காலும் விசுவாசம் ஆகாது. அது எப்படி முடியும் என்று எனக்கும் தெரியாது. ஆனால் அதை நான் விசவாசிக்கிறேன். தேவன் எப்படி ஒரு பாவியை இரட்சிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அதை செய்கிறார். இவைகளை எல்லாம் தேவன் எப்படி செய்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் அதை செய்கிறார். அது அப்படித்தான். அது எப்படியென்று என்னால் விளக்க முடியாது. இப்பொழுது, நல்லது, நான்... அது விளக்கப்படவே முடியாது. யாருமே அதற்கு விளக்கம் தர முடியாது. நீங்கள் அப்படி செய்தால், அது விசுவாசம் ஆகாது. 212. தேவனும் கிறிஸ்துவும் எப்படி ஒரே நபராக இருக்க முடியுமென்று எனக்குப்புரியவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரே என்று வேதம் கூறுகிறது. உங்களால் அதை விளக்க முடியாது. ஆனால் அவர்கள் ஒருவரே. “என் பிதா என்னில் இருக்கிறார். இந்த கிரியைகளை நான் செய்வில்லை. என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார். நான் அவருடைய கிரியைகளைச் செய்யாவிட்டால், நான் அவருடையவன் அல்ல என்பதை அது காண்பிக்கிறது. அவருடைய கிரியைகளை நான் செய்தால், நான் அவருடையவன் என்று அவரே சாட்சி கொடுக்கிறார்." 213. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அதே காரியம். நீங்கள் விசுவாசிப்பீர்-களானால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 214. எனக்கு முன்னால் இப்பொழுது ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு கறுப்பு தலைமயிர் உள்ளது. அவர் கையில் கடிகாரம் கட்டிக் கொண்டு, கறுப்பு 'சூட்' அணிந்திருக்கிறார். அவர் மூக்கு கண்ணாடி அணிந்திருக்கிறார். இங்கு நீங்கள் பார்ப்பீர்களானால், அவர் கண்ணை மூடிக் கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அந்த மனிதனை எனக்குத் தெரியாது. அவரை எனக்குத் தெரியாதென்று பரலோகப் பிதா அறிவார். அவரை இப்பொழுது ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கப் போகிறேன். ஏனெனில் அவர் மிகுந்த உத்தமத்துடன் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரை நான் குறிப்பிட்ட முதற்கொண்டு, அவர் கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருக்கிறார். இந்த மனிதன் எனக்கு அந்நியர். அவரை எனக்குத் தெரியாது. தேவன் அவரை அறிந்திருக்கிறார். அவர் எனக்கு வெளிப்படுத்தித் தருவார். வேதத்தில் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தம் உண்மையானால், அவர் எதற்காக கண்களை மூடிக் கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தி தர முடியும். அதை நீங்கள் விசுவாசிக்-கிறீர்களா? (சபையோர் “ஆமென்' என்கின்றனர் - ஆசி). 215. ஐயா, அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கண்களை திறந்து, நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து இங்கு பாருங்கள். அதை விசுவாசிக்கிறீர்களா? சரி. உங்களை எனக்குத் தெரியாதென்று நீங்கள் அறிவீர்கள். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். ஆனால் தேவன் உங்களை அறிவார். அவர் அழ ஆரம்பித்து விட்டார். தேவன் அவருடைய விண்ணப்பத்துக்கு விடையளிக்கப் போகிறார் என்று இப்பொழுது நான் அவரிடம் கூற முடியும், பாருங்கள், ஏனெனில் அந்த ஒளி அவர் மேல் விழுந்து, இருளிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டது. பாருங்கள்? 216. இவர் யாரோ ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார், அது அவருடைய பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சிறுவன். அது அவருடைய மகன். அது உண்மை . இந்த சிறுவன் வயிற்றுக் கோளாறினால் அவதியுறுகிறான். அது அவனுடைய குடல்களைப் பற்றின கோளாறு. அது உண்மை. அது உண்மை. 217. நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவரல்ல. நீங்கள் அரிசோனாவைச் சேர்ந்தவரல்ல. நீங்கள் கலிபோர்னியாவிலிருந்து வருகின்றீர்கள். அது உண்மை. நீங்கள் ஒரு போதகர், அசெம்பிளீஸ் ஆப் காட் சபையுடன் ஐக்கியங் கொண்டவர். அது உண்மை, சங்கை மக்கெய்கர்... இல்லை, சங்கை கெய்க். அது உண்மை. அது உண்மையா? அப்படியானால் உங்கள் கைகளை இப்படி ஆட்டுங்கள். உங்கள் மகன் குணமடைந்து விடுவான். உங்கள் விசுவாசம்-! 218. இப்பொழுது என்ன? அதோ கைகளையுயர்த்தியுள்ள அந்த மனிதன். அவருக்கு என்னைத் தெரியாது. எனக்கும் அவரைத் தெரியாது. அது என்ன? அவர் பிரதான ஆசாரியரைத் தொட்டார். இப்பொழுது, பாருங்கள், அவர் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருக்கவில்லை. இப்பொழுது அவர் என்ன செய்ய வேண்டும், இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவருக்கு கூறப்பட்டது சத்தியம் என்று அவர் விசுவாசிக்க வேண்டும். ஏனெனில் எனக்கு அவரைத் தெரியாதென்று அவர் அறிவார். அது உண்மை. 219. இதோ எனக்கு முன்னால் ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் தலை குனிந்து கொண்டிருக்கிறாள். அவள் புற்று நோயினால் அவதியுறுகிறாள். அவளும் கலிபோர்னியாவிலிருந்து வருகிறாள். அவள் அதை இழக்க மாட்டாள் என்று நம்புகிறேன். குமாரி ஆடம்ஸ், அது தான் அவள் பெயர். அவளை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. ஆம், அது உண்மை. 220. இங்கு ஒரு ஸ்திரீ பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். என் கையை அவளிடம் நீட்ட முடியவில்லை, ஆனால் அந்த ஒளி அவள் மேல் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். அவள் ஆழ்ந்த தொல்லையில் இருக்கிறாள். ஒன்று அவள் கழுத்தில் கோளாறு. அடுத்ததாக அவளுக்கு ஆவிக்குரிய கோளாறு உள்ளது, அது அவளைத் தொல்லைப்படுத்துகிறது. அதுவுமின்றி அவளுக்கு வீட்டுத் தொல்லை, அவள் மகள் ஓடிவிட்டாள். அது உண்மை. அது உண்மை, இல்லையா? அவள் கரத்தை உயர்த்தியிருக்கிறாள், திருமதி மில்லர். அது உண்மை. நீ விசுவாசிக்கிறாயா? தேவன் உன் மகளை வீட்டுக்கு கொண்டு வருவார், உன் சரீரத்தை சுகப்படுத்துவார். அவளை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. அவள் எனக்கு முற்றிலும் தெரியாதவள். 221. கூட்டத்தில் ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இந்த இடத்தைச் சேர்ந்தவளல்ல. அவளும் கலிபோர்னியாவிலிருந்து வருகிறாள். அவளுக்கு புற்று நோய் உள்ளது. அது அவள் மார்பில் உள்ளது. அவளுக்கு ஒரு மார்பை அறுத்து எடுத்து விட்டனர், அது மற்ற மார்புக்கு பரவியுள்ளது. அது உண்மை. திருமதி காலின், அது உண்மை. தேவன் உன்னை குணமாக்குவாரென்று விசுவாசிக்கிறாயா? சரி, விசுவாசி. ஸ்திரீயே, உனக்கு என்னைத் தெரியாது. எனக்கு உன்னைத் தெரியாது. அது உண்மை, பாருங்கள், அவள் எனக்குத் தெரியாதவள். தேவன் இங்கு பிரசன்னமாயிருக்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ள-! 222. அவளுக்கு பக்கத்தில் ஒரு ஸ்திரீ அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய பெயர் திருமதி ஹாரிஸ். அவள் எனக்கு முற்றிலும் தெரியாதவள். ஆனால் ஆவி இந்த ஸ்திரீயின் மேல் பட்ட போது! அவர் அவள் மேல் அனுதாபம் கொண்டிருக்கிறார். அவள் கலிபோர்னியாவிலிருந்து வருகிறாள். அது உண்மை . அவளுக்கு தோளில் கோளாறு உள்ளது. அது உண்மை. தேவன் உன்னை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? அது உண்மையானால், ஜனங்கள் காணத்தக்கதாக உன் கையையுயர்த்து, எனக்கு முற்றிலும் தெரியாதவள். 223. உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதீர்கள். அதை செய்வது எது? நீங்கள் அதற்கு விளக்கம் தர முடியாது. அது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. இவர்களைக் கேட்டு பாருங்கள். இவர்களை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அவர்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. இது இப்படியாக கூட்டத்தில் நடைபெற்றுக் கொண்டே செல்ல முடியும். 224. ஆனால், இப்பொழுது பாருங்கள், உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாதீர்கள். அவர் என்ன செய்வாரென்று வாக்களித்துள்ளாரோ, அதன் மேல் சாய்ந்து இருங்கள். அது மாமிச சரீரத்தில் அந்த மனிதனுக்குள் மறைந்திருந்து, கூடாரத்திலிருந்த சாராள் நகைத்ததை அறிந்த அதே ஆவி. அது சரியா? உலகம் அக்கினியால் அழிக்கப்படுவதற்கு முன்பு, மனுஷகுமாரன் இவ்விதமாக தம்மை மறுபடியும் வெளிப்படுத்துவார் என்று அவர் வாக்களித்தபடியே, மனுஷகுமாரன் (தீர்க்கதரிசனமாக) தம்மை மறுபடியும் மாமிச சரீரத்தில், அன்று செய்தது போல், இன்றிரவு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்படியானால் நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? அழிவுக்கு அருகில். 225. நண்பனே, பாவியாக இங்கு நின்று கொண்டிருக்க வேண்டாம். அவருடைய சமூகத்தில் இருக்கும் போதே, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள். போதகர்கள் மரித்து போன தாயைக் குறித்து கதைகளை சொல்லி உங்களை வருந்தி அழைப்பது வழக்கமாயுள்ளது. அது சரிதான். ஆனால் நமது தாய் மரித்துப் போன அடிப்படையில் நாம் வருவதில்லை. என் தாய் மரித்து விட்டார்கள், என் தந்தையும் கூட. ஆனால் நாமோ, உலகத்தின் பாவங்களைப் போக்க தேவன் தம்மை இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தின அந்த அடிப்படையில் வந்து புத்தி பூர்வமாக அதை ஏற்றுக் கொள்கிறோம். அந்த பாவ நிவாரணத்தை நம்பி நாம் வருகிறோம். அவர் தமது வார்த்தையை உறுதிப்படுத்தி விட்ட பிறகு..... 226. நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்க சபை, பிரஸ்பிடேரியன் சபை, அல்லது எந்த சபைக்கு சென்றிருந்தாலும், அல்லது இதுவரை சபைக்கு செல்லாமல் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் அதை வித்தியாசமாக அறிந்து கொண்டிருந்தீர்கள் என்பதை ஒப்புக் கொண்டு, நீங்கள் உண்மையில் மறுபடியும் பிறக்கவில்லை, ஆனால் மறுபடியும் பிறக்க விரும்பி, அந்த வாக்குத்தத்தத்தை இப்பொழுது ஏற்றுக் கொள்ள மனதாய் இருந்தால், நீங்கள் உடனடியாக பரிசுத்த ஆவியினால் நிறையப்படாமல் இருக்கலாம்... ஆனால் கூட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது, நீங்கள் நிறையப்படுவீர்கள். அந்த அடிப்படையில் நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், எழுந்து நில்லுங்கள். நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலேயே உங்களுக்காக நான் ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறேன். அதை அறிந்துள்ள இங்குள்ள ஓவ்வொருவரும்...... 227. உங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து, ஒ, நான் அந்நிய பாஷை பேசினேன்" என்று சொல்லாதீர்கள். அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அந்நிய பாஷைகள் பேசுவதில் நானும் நம்பிக்கை கொண்டுள்ளவன். 228. ஆனால் மந்திரவாதிகள், பிசாசுகள், மற்றவை அந்நிய பாஷைகள் பேசி அவைகளுக்கு அர்த்தம் உரைப்பதை நான் கண்டிருக்கிறேன். அது உண்மை. இங்கு வந்துள்ள மிஷினரிகளைக் கேட்டுப்பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். சகோ.க்ரீச், அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் அந்நிய பாஷைகள் பேசி, மண்டை ஓட்டிலுள்ள இரத்தத்தை குடித்து, பிசாசை நோக்கிக் கூப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். நிச்சயமாக அவர்கள் பென்சிலைக் கீழே வைத்து, அது எழுந்து அந்நிய பாஷைகள் எழுதி, மந்திரவாதிகள் அங்கு நின்று கொண்டு அவைகளுக்கு அர்த்தம் உரைப்பதை நான் கண்டிருக்கிறேன். 229. எனவே அந்நிய பாஷைகள் பேசுதல் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமல்ல. நீங்கள் அந்நிய பாஷை பேசி, வார்த்தையை மறுதலித்தால், எங்கோ ஏதோ தவறுள்ளது. உண்மை, உ, ஊ, உண்மை. உங்கள் சுய புத்தியின் மேல் சாயாதீர்கள். 230. இங்குள்ள உங்களில் சிலர், "நான் கூச்சலிட்டேன்" எனலாம். நானும் கூட கூச்சலிடுவது வழக்கம். ஆனால் அதன் மேல் சாயாதீர்கள். 231. எல்லாவிதமான பிசாசின் வல்லமையும் கூச்சலிட்டு அலறுவதை நான் கண்டிருக்கிறேன். முகம்மதியர்கள் கூச்சலிட்டு அலறி, உணர்ச்சிவசப்பட்ட ஒரு நிலையை அடைந்து, கைகளில் உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஏற்றிக் கொள்வதை நான் கண்டிருக்கிறேன். இந்தியாவில் அவர்கள் கூச்சலிட்டு மேலும் கீழும் குதித்து, இரும்பு கொக்கிகளை உடலில் குத்திக் கொண்டு உக்கிரமான நெருப்புத் தணலில் நடந்து செல்வதைக் கண்டு இருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கின்றனர். 232. எனவே உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாமல் தேவனுடைய வார்த்தையின் மேல் சாய்ந்திருங்கள். உங்கள் வாழ்க்கை வேதத்துடன் ஒத்துப் போகாமல், நீங்கள் அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசியாமல் இருந்து, இப்பொழுது விசுவாசிக்க விரும்பி, நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாயிருப்பதால், தேவன் தம்முடைய சித்தத்தை உங்களில் நிறைவேற்ற வேண்டுமென்று விருப்பம் கொண்டால், நீங்கள் இப்பொழுது எழுந்து நின்று, “சகோதரனே, இப்பொழுதே அதை ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்வீர்களா? நன்றி. நன்றி. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப் பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்-பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அற்புதம். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உத்தமமாயுள்ள உங்களுக்கு தேவன் அருளுவாராக. நீங்கள் சொல்லலாம். நின்று கொண்டேயிருங்கள்..... 233. நீங்கள், 'சகோ. பிரன்ஹாமே, நான் சபை அங்கத்தினன். நான் உண்மையில் பெந்தெகொஸ்தேகாரன். ஆனால் வேதத்திலுள்ள எல்லா வார்த்தையும் உண்மை என்று அறிக்கையிடும் விஷயத்தில், என்னால் அப்படி செய்ய முடியவில்லை. அப்படி செய்ய வேண்டுமெனும் விருப்பம் என்னிடத்தில் உள்ளது. எனக்கு உதவி செய்யும். எனக்காக ஜெபியுங்கள். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எழுந்து நின்று அப்படி இருந்தேன் என்று சாட்சி கூறவே விரும்புகிறேன்" எனலாம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, உங்கள் இருதயத்தின் ஆழத்தில் நீங்கள் அப்படிப் பட்டவர்கள் அல்ல. அதை தேவன் அறிவார். எனவே நீங்கள் ஏன் எழுந்து நிற்கக்கூடாது? உங்கள் சுயபுத்தியின் மேல் சாயாமல், அவருடைய வார்த்தையின் மேல் சாயுங்கள். 234. இன்னும் சிலர் எழுந்து நிற்பீர்களா? வேறு யாராகிலும் எழுந்து நிற்க விரும்புகிறீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும். "தேவனே, எனக்குதவி செய்யும். தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. நின்ற வண்ணமாகவே இருங்கள். 235. "அதனால் எனக்கு நன்மை உண்டாகக் கூடுமா? என்று கேட்கலாம். ஒரு முறை எழுந்து நின்று அதனால் நன்மை உண்டாகிறதா என்று பாருங்கள். "சகோ, பிரன்ஹாமே, நான் சரியாயிருக்க விரும்புகிறேன். நான் சரியாயிருக்க விரும்புகிறேன்" என்று கருத்தோடு கூறுங்கள். 236. உங்கள் சபையை விட்டு விலகுங்கள் என்று நான் கூறவில்லை. இல்லை, ஐயா. நீங்கள் இருக்கிற இடத்திலேயே இருந்து, அந்த சபையில் பரிசுத்த ஆவி நிறைந்தவர்களாக இருங்கள். நீங்கள், "என் போதகர் என்ன சொல்வார் என்று தெரியவில்லையே" எனலாம். அவர் தேவனுடைய மனிதனாயிருந்தால், உங்களைப் பாராட்டுவார். பாருங்கள், அது உண்மை . 237. "மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பிதாவை மகிமைப்படுத்தும்- படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிகக்கடவது" (மத். 5: 16). 238. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக, உன்னையும். சகோதரனே, உன்னையும். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்குள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. 239. எழுந்து நின்றவர்களாகிய உங்களுக்கு எழுந்து நின்ற பிறகு நல்லுணர்வு ஏற்பட்டிருந்தால், உங்கள் கைகளையுயர்த்தி அதை மற்றவர்களுக்கு தெரிவியுங்கள். பாருங்கள், எல்லோருடைய கரங்களும். பாருங்கள்? உங்களுக்கு நிச்சயமாக நல்லுணர்வு ஏற்பட்டுள்ளது. பாருங்கள், நீங்கள் உத்தமமாக எழுந்து நின்றீர்கள். நின்று கொண்டிருப்பவர்கள், "நான் ஒரு சாட்சியாயிருப்பேன்" என்று கூறுங்கள். 240. "இங்கு எனக்காக நிற்பவன் எவனோ, அவனுக்காக நானும் நிற்பேன். மனுஷருக்கு முன்பாக என்னைக் குறித்து வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைக் குறித்து நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் வெட்கப்படுவேன்." அவரைக் குறித்து வெட்கப்படாதீர்கள். உங்கள் சிந்தனையின் மேல் சாயாதீர்கள். தேவனுடைய வார்த்தையின் மேல் சாய்ந்திருங்கள். “மனுஷருக்கு முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன்.' 241. நாம் ஜெபிப்பதற்கு முன்பு, வேறு யாரும் உண்டா? நாம் தலை வணங்குவோம். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நிச்சயமாக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும் சகோதரனே. நிச்சயமாக நாம் தலை வணங்கியிருக்கும் இந்நேரத்தில் வேறு யாராகிலும் உண்டா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும். அது சரி. நீங்கள் இன்னும் நின்று கொண்டிருக்கிறீர்கள். நாம் சிறிது நேரம் காத்திருப்போம், சிறிது நேரம். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. "தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக' என்று கூறுவதனால் ஏதாகிலும் அர்த்தம் உண்டா? என்று நீங்கள் கேட்கலாம். அது என் ஆசீர்வாதங்களை உங்கள் மேல் கட்டளையிடுவதாகும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 242. உட்காருவதற்கு இடம் இல்லாமல், சுவற்றினருகில் நின்று கொண்டு இருப்பவர்களே, உங்கள் கைகளையுயர்த்தி, "தேவனே, இது நான்" என்று கூறுவீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும். சகோதரியே, உன்னையும். என் சகோதரனே, உன்னையும். என் சகோதரியே, உன்னையும். 243. ஓ, பரிசுத்தாவி கூட்டத்தினரின் மேல் இனிமையாக அசைவாடிக் கொண்டிருக்கிறார். உங்களால் அதை உணர முடிகிறதா? மேடையின் மேலுள்ள இளைஞனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மூலையில் உள்ளவரே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சிறுவனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஆம். 244. ஓ பரிசுத்த ஆவியே, இப்பொழுது எங்கள் இருதயங்களில் புத்துணர்ச்சியுடன் அசைவாடுவீராக. எங்கள் தவறுகளைக் காண்பியும், கர்த்தாவே. நாங்கள்... எங்கள் சுயபுத்தியின் மேல், எங்கள் சிந்தனையின் மேல் நாங்கள் சாய மாட்டோம். ஆனால் நாங்கள் உம் மேல் சாய்ந்திருப்போம். ஏனெனில் நாங்கள் உம்முடைய தெய்வீக சமுகத்தில் இன்றைக்காக உறுதிப்படுத்தப்பட்ட வாக்குத்தத்தத்தின் முன்னால் நின்று கொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். எல்லா சிந்தனைக்கும் மேலான விதத்தில் உம்மை வெளிப்படுத்தி தந்திருக்கிறீர். அதை எங்கள் சிந்தனை-யினால் அறிந்து கொள்ளவோ, அல்லது அதற்கு விளக்கம் தரவோ எங்களால் முடியாது. எங்கள் மத்தியில் இப்பொழுது நீர் இறங்கி வந்து, இங்குள்ளதை எங்களுக்கு வெளிப்படுத்திதந்தீர். அதை மனிதரும் ஸ்திரீகளும் விசுவாசித்து ஏற்றுக் கொண்டனர். 245. தேவனே, எங்கள் ஒவ்வொருவரையும் உமது மார்பில் அணைத்து, அக்கினி கடந்து போகும் வரைக்கும் காலங்கள் தோறும் உள்ள கன்மலையில் ஒளித்துக் கொள்ளும். கர்த்தாவே, நாங்கள் எரிந்து போகவிருக்கிறோம். அதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் மீண்டும் சோதோமில் வந்திருக்கிறோம். ஆனால் நீதிமான்கள் பொல்லாதவர்களுடன் அழிந்து போவதில்லை. கர்த்தாவே, உம்முடைய பிள்ளைகளை நீர் அழைத்துக் கொள்வீர். நீர் லோத்தினிடம், "சோதோமை விட்டு வெளியே போ" என்று சொன்னீர். தேவனே, அந்த நிலையில் இன்றிரவு உள்ள ஒவ்வொருவரையும், அவர்களுடைய நிலையென்ன என்று நிச்சயமாக அறிந்திராத இவர்களை... 246. தேவனே, அவர்கள் ஒரு வழி தெருவில், தவறான வழியில் செல்ல விருப்பப்படமாட்டார்கள். அவர்கள் சரியான நிலையில் இருந்தால், சிகப்பு வெளிச்சத்தைக் கண்ட பிறகும் அதை கடந்து செல்ல துணிச்சல் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் விபத்தில் கொல்லப்படுவார்கள். அப்படி இருக்க, நித்திய ஸ்தலத்துக்கு போக வேண்டிய விஷயத்தில், அவர்கள் எப்படி ஊகித்து, அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்துள்ளபடியால், துணிகரச் செயல்களைப் புரிய அதிகாரமில்லாதிருந்தும் துணிந்து செயல்பட முடியும்? அவர்களால் முடியாது. தேவனுடைய வார்த்தை அன்றிருந்தது போலவே இன்றுமுள்ளது என்பதையும், இந்த வாக்குத்தத்தங்கள் எப்படி நிறைவேறு-கின்றன என்றும் அவர்களால் புரிந்து கொள்ள இயலாமல் “அப்போஸ்தலர் காலம் முடிவு பெற்றுவிட்டது” என்கின்றனர். பிதாவே, அவர்களுக்குதவி செய்யும். அவர்களை உம்முடைய கரங்களில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 247. நன்றி, என் சகோதரனே, சகோதரியே. உங்களை என் சகோதரன், சகோதரி என்றழைக்க நான் பெருமிதம் அடைகிறேன். 248. ஞாபகம் கொள்ளுங்கள், நான் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் தேவன் என்னிடம் பதில் கேட்பார். இன்றிரவு நான் பேசின ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பதில் சொல்லியாக வேண்டும். அது எனக்கு நன்றாகத் தெரியும். நான் சிறுவனாயிருந்த முதற்கு இந்த சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்து, அதனால் நான் ஆகாதவனாய் போன காரணம் என்ன? 249. உங்களில் எத்தனை பேர் இன்றிரவு வியாதிப்பட்டும் ஊனமாயும் இருந்து, ஜெபிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். இன்னும் ஒரு காரியத்தை எனக்காக செய்வீர்களா? உங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். உங்கள் சபையில் நீங்கள் தலை வணங்குவது போல, இங்கும் தலை வணங்குங்கள். எல்லோரும், மேடையின் மேல் உள்ளவரும் கூட. 250. அன்புள்ள தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும் அவருடைய உறுதிப்படுத்தப்பட்ட பிரசன்னத்திலும்! பிரசங்கிக்கப்பட்ட அந்த வார்த்தை நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கறீர் என்பதை உறுதிப்படுத்தினது. தேவனுடைய பரிசுத்த ஆவி தாமே இப்பொழுது இந்த திரளான ஜனங்களின் மேல் விழுவதாக. அநேகர் வந்து உம்மை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர், பின் வாங்கிப்போன அநேகர் உம்மை ஏற்றுக் கொண்டு திரும்பி வந்து விட்டனர். ஓ தேவனே, வியாதியாயுள்ள ஒவ்வொருவரையும் சுகப்படுத்த வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று நீர் கூறியிருக்கிறீர். கர்த்தாவே, அதை நீர் வாக்களிருயிருக்கிறீர். விசுவாசிக்கும் பிள்ளைகள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்துள்ளனர். 251. சாத்தானே, நீ தோற்றுப் போனாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த ஜனங்களை விட்டு வெளியே வா. தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம் ஜனங்களைப் போகவிடு. இயேசுவின் நாமத்தில். ஆமென். 252. இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகமளிப்பவரென்றும் இரட்சகரென்றும், விசுவாசித்து, அந்த அடிப்படையில் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் எழுந்து நின்று, "இப்பொழுது நான் இயேசு கிறிஸ்துவை எனக்கு சுகமளிப்ப-வராகவும் என் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லுங்கள். அற்புதம்! கர்த்தருக்கு நன்றி! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இப்பொழுது நாம் கரங்களையுயர்த்தி பாடுவோம். அவரை நான் துதிப்பேன், அவரை நான் துதிப்பேன் பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி யானவரை துதிப்பேன் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவினதற்காக சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை , செலுத்துங்கள். 253. ஓ, உங்களுக்கு நல்லுணர்வு ஏற்பட்டுள்ளது அல்லவா? உங்கள் கைகளை ஆட்டுங்கள். ஓ, என்னே! நாம் மறுபடியும் பாடுவோம்: அவரை நான் துதிப்பேன், அவரை நான் துதிப்பேன் பாவிகளுக்காக அடிக்கப்பட்ட... (ஆட்டுக்குட்டியானவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரை) அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவினதற்காக சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள். 254. உங்களுக்கு அது பிரியமா? (சபையோர் "அல்லேலூயா' என்று ஆர்ப்பரிக்கின்றனர் - ஆசி), கைநீட்டி யாராகிலும் ஒருவருடன் கைக் குலுக்குங்கள். இந்த கூட்டம் முடிவடைகிறது. இனி கன்வென்ஷன் தொடங்கும். “சகோதரனே, யாத்திரீகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக" என்று சொல்லுங்கள். அது அருமையானது. அது நல்லது. அற்புதமானது! இதற்கு பிறகு நமக்கு மகத்தான கன்வென்ஷன் இருக்கும் என்று விசுவாசிக்கிறீர்களா? ("ஆமென்). ஒரு மகத்தான கூட்டத்தை அருளியதற்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்துவோம். இப்பொழுது ஒரு மகத்தான கன்வென்ஷனை நாம் பெறப் போகிறோம். அதை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் "ஆமென்" என்று சொல்லுங்கள் ("ஆமென்'). என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே (அவரை இப்பொழுது நோக்கிப் பார்ப்போம்) ஓ தெய்வீக இரட்சகரே நான் ஜெபிக்கும் போது எனக்கு செவிகொடும் என் பாவம் அனைத்தும் போக்கியருளும் ஓ இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாயிருக்கச் செய்யும். வாழ்க்கையின் இருளின் பாதையில் நடந்து' துன்பம் என்னை சூழும் போது என் வழிகாட்டியாயிரும் இருள் பகலாக மாறக் கட்டளையிடும் துயரத்தின் பயங்களை போக்கியருளும் ஓ, இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாயிருக்கச் செய்யும். 255. ஆமென்!' சபையோர் "ஆமென்" என்றனர் (சபையோர் “ஆமென்' என்கின்றனர் - ஆசி). அல்லேலூயா! ஓ, அவரை நான் துதிப்பேன் பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதிப்பேன் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவினதற்காக சகல ஜனங்களே, அவருக்கு மகிமையை செலுத்துங்கள் எவ்வளவு அற்புதமானது! 256. சரி, ஆசீர்வாதத்துக்கு இப்பொழுது நாம் தலைவணங்குவோமா? அதை கூறத் தெரிந்து கொள்ளப்பட்டுள்ளது யார் என்று தெரியவில்லை. கலிபோர்னியாவிலிருந்து வந்துள்ள சகோ.ஜானி-மனாடல்; நாம் தலை வணங்கி இருக்கும்போது. நாளை இரவு மறந்து விடாதீர்கள். கன்வென்ஷனின் ஆரம்பக் கூட்டம். அந்த கூட்டம் நாளை இரவு இதே கூடத்தில் இரவு ஏழரை மணிக்கு நடைபெறும். 257. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுடைய சமூகத்தை நீங்கள் ரசித்தீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). சகோ. ஜானி ஆசீர்வாதம் கூறி நம்மை அனுப்ப, நாம் இப்பொழுது தலைவணங்குவோம்.